தமிழ்நாடு

திருமங்கலம் - திருநகர் இடையே ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பரிந்துரை:கோச்சடை, விளாங்குடி குழப்பத்தில் மாநகராட்சி

Added : ஜூன் 19, 2015
Advertisement
திருமங்கலம் - திருநகர் இடையே ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பரிந்துரை:கோச்சடை, விளாங்குடி குழப்பத்தில் மாநகராட்சி

மதுரை:மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டை புறநகர் பகுதிக்கு மாற்றும் திட்டம் குறித்து மாநகராட்சி குழப்பத்தில் உள்ளது. இதற்கிடையே திருமங்கலம் - திருநகர் இடையே பஸ் ஸ்டாண்டை மாற்ற வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை குறைக்க மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகள் உருவாக்கப்பட்டன. இதில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இடப்பற்றாக்குறை, வசதி குறைவு, நெரிசல் போன்ற காரணங்களால் வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலில் கோச்சடையில் மாநகராட்சியின் பம்பிங் ஸ்டேஷன் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் மதுரை நகர் பகுதியின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் இடமாக இருப்பதாலும், வெளியூர் பஸ்கள் வந்து செல்வதற்கு ஏற்ப அகலமான ரோடுகள் இல்லாததாலும் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இந்த இடம் உகந்தது அல்ல என முடிவு செய்யப்பட்டது. இங்குள்ள 8 ஏக்கரில் லாரி பார்க்கிங் செயல்படுகிறது. நீராதாரம் உள்ள இடமாக இது இருப்பதால் லாரி பார்க்கிங்கிற்கு எந்த கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தாமல் உள்ளது.
ஆரப்பாளையத்திற்கு மாற்று இடமாக விளாங்குடி பகுதியில் 12 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகள் நடப்பதால் இத்திட்டம் உடனே நிறைவேற வாய்ப்பு குறைவு என்கின்றனர் அதிகாரிகள். இந்த இடம் நீங்கலாக இப்பகுதியில் மாநகராட்சி இடங்கள் இல்லாததால் வேறு எந்த பகுதியில் பஸ் ஸ்டாண்டை மாற்றுவது அல்லது காத்திருப்பதா என்ற மாநகராட்சியில் குழப்பம் நீடிக்கிறது.மதுரையில் சேட்டிலைட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை இவற்றை மையமாக வைத்து ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டை திருமங்கலத்திற்கும் திருநகருக்கும் இடையே மாற்ற வீட்டுவசதி வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசிடமிருந்தும் வரவேற்பும், அதிக நிதி உதவிகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X