தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் உணவு பற்றாக்குறை:நோயாளிகள் குவிந்ததால் பரபரப்பு

Added : ஜூன் 19, 2015
Advertisement

கோபி:கோபி, அம்மா உணவகத்தில் தினமும் காலை, 8.30 மணிக்கே உணவு தீர்ந்து, பூட்டிவிடுவதாக கூறி, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மலிவு விலையில், தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு சார்பில், கோபி, கச்சேரிமேடு அரசு மருத்துவமனை அருகே, 36 லட்சம் ரூபாயில், அம்மா உணவகம் கட்டி, மே, 24ம் தேதி திறக்கப்பட்டது.
தினமும் காலை, 7 முதல், 10 மணி வரை, இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கு, நபருக்கு, நான்கு இட்லிகள் வீதம், தலா, 300 பேருக்கு, 1,200 இட்லி தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மதியம், 12 முதல் மதியம், 3 மணி வரை, தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் காலை, 10 மணி வரை டிபன் விற்பனை செய்வதற்கு பதில், காலை, 8.30 மணிக்கே கதவை பூட்டி விடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்தாணியில் சோடாக்கடை வைத்திருக்கு வேலுசாமி,48, என்பவர், ரத்த அழுத்தம் பார்க்க, கோபி அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு, அம்மா உணவகத்தில் டிபன் சாப்பிட வந்தவர். காலை 8.45 மணிக்கே பூட்டியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல் கணபதிபாளையத்தை சேர்ந்த சாந்தி,34, பதியை சேர்ந்த சரோஜா,47, பழனிக்கவுண்டம் பாளையம் சென்னியம்மாள்,70, அத்தாணி ரமேஷ்,27, மொடச்சூர் கூலித்தொழிலாளி தனபால், 27, கொளப்பலூர் மனோன்மணி,38, ஆகியோர் உணவுக்கு வழியின்றி அவதிப்பட்டனர்.
நோயாளிகள் தரப்பில் கூறியதாவது: தினமும் காலை, 8.30 மணிக்கே உணவு தீர்ந்து விடுவதாக, கோபி அம்மா உணவகத்தில், கதவை பூட்டி விடுகின்றனர். நோயாளிகள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட உணவகம், குறிப்பிட்ட நேர த்துக்கு முன்னரே, உணவு தீர்ந்து விடுவதாக தெரிவிப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இட்லி மற்றும் சாம்பர் தரமற்ற நிலையில் தயாரித்து வ ழங்குவதால், காசு கொடுத்து வாங்குவோர், சாப்பிட முடியாமல், குப்பை தொட்டியில் வீசி செல்கின்றனர்.இதுபோன்ற செயலால், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சி மீது, அதிருப்தி ஏற்படுகிறது, என்றார்.
இதுபற்றி அம்மா உணவகத்தை பராமரிக்கும் அன்னை சத்தியா மகளிர் குழு பூங்கொடி கூறுகையில், ""1,200 இட்லியும் விற்பனையாகி விடுகிறது. சாம்பார் சாதம், தயிர் சாதம் என தலா, 300 சாப்பாடுகள், எங்களுக்கு வந்த உத்தரவுப்படி விற்பனை செய்கிறோம். வேண்டுமானால், நான்கு இட்லிக்கு பதிலாக, இரண்டு இட்லி வழங்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X