பெங்களூரு: செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யானில் எரிபொருள் அதிகம் இருப்பதால் அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப் பட்டு்ள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
செவ்வாய்கிரகத்தை ஆராயும் விதமாக இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட மங்கள்யான் விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி விண்ணி்ல் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்பது மாத பயணத்திற்கு பின்னர் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி செவ்வாய்கிரகத்தை வெற்றிகரமாக அடைந்தது.
அன்றுமுதல் செவ்வாய் கிரகம் பற்றிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிவைத்து கொண்டிருந்தது மங்கள்யான். இருப்பினும் தொடர்ந்து ஆறு மாத கால இடைவெளிக்கு பின்னர் விண்கலத்தின் செயல்பாடு குறைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தற்போதைய நிலவரப்படி அதில் உள்ள எரிபொருள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் அதன் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆயுள் நீட்டிப்பு காரணமாக செவ்வாய்கிரகத்தை பற்றிய கூடுதல் விவரங்களை பெற முடியும் எனவும், தற்போது அக்கிரகத்தின் பருவ காலம் குறித்த புகைப்படங்கள் 400க்கும் மேல் அனுப்பி வைத்துள்ளது என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE