உலகின் டீசல் கார் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை அடையும்

Added : ஜூன் 28, 2015 | கருத்துகள் (12)
Advertisement
புதுடில்லி: உலகின் மொத்த டீசல் கார் உற்பத்தியில் இந்தியா விரைவில் முதலிடத்தை அடைந்து விடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனி, அந்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சுற்றுப்புற கொள்கைகள் காரணமாக டீசல் கார் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க முடிவு செய்துள்ளது. சென்ற வருடம் மொத்த உள் நாட்டு கார் விற்பனையில்
இந்தியா முதலிடத்தை அடையும்

புதுடில்லி: உலகின் மொத்த டீசல் கார் உற்பத்தியில் இந்தியா விரைவில் முதலிடத்தை அடைந்து விடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனி, அந்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சுற்றுப்புற கொள்கைகள் காரணமாக டீசல் கார் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க முடிவு செய்துள்ளது.

சென்ற வருடம் மொத்த உள் நாட்டு கார் விற்பனையில் டீசல் கார்களின் பங்கு 54 சதவிகிதமாக இருந்த நிலையில், டீசல் விலையில் ஏற்பட்ட நிலைத் தன்மை இன்மை மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தடை போன்ற பிரச்சனைகளால் டீசல் கார் விற்பனை பாதிக்கத் தொடங்கியது. ஆனால், தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட சிறிய ரக டீசல் என்ஜின்களும், விளையாட்டு கார்களும் மறுமலர்ச்சி ஏற்பட காரணங்களாக அமைந்தன.

கடந்த வருடம் இந்தியாவை விட ஜெர்மன் மட்டும் டீசல் கார் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. மேலும் இந்திய நாடு, ஜப்பானிய நிறுவனங்களான ஹோன்டா, சுசுகி போன்றவற்றின் டீசல் இன்ஜின்களை உற்பத்தி செய்யும் தளமாகவும் இருக்கிறது. அத்துடன் டீசல் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஒரே ஆண்டில் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் இது அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் டீசல் கார்களையே விரும்புகிறார்கள். நெடுந்தூர பயணங்களுக்கும், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கும் டீசல் பொருத்தமான எரிபொருளாக இருப்பதால் டீசல் கார்களுக்கு இந்தியாவில் கிராக்கி அதிகமாக உள்ளது. மேலும் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் உள்ள விலை வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் டீசல் கார்களின் விற்பனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
28-ஜூன்-201517:15:24 IST Report Abuse
Loganathan ஜென ரேடர்களுக்கும் டீசல் எஞ்சின்கள் பெரிதும் பயன்படுகின்றன கப்பல்களுக்கும்.
Rate this:
Cancel
Sundar Rajan - chennai,இந்தியா
28-ஜூன்-201516:24:37 IST Report Abuse
Sundar Rajan டீசலில் முதலிடம் பெறும்போது தண்ணீர் மற்றும் சூரிய ஒளியில் ஓடும் காரில் மேற்கத்திய நாடுகள் வழி காண்பிக்கும் அந்த நேரம் இந்திய கரும் புகை கூட்டத்தில் சிக்கி தவிக்கும்,
Rate this:
Cancel
indian - Namakkal,இந்தியா
28-ஜூன்-201516:03:34 IST Report Abuse
indian இதில் சந்தோசப்படவோ பெருமைப்படவோ ஒன்றுமில்லை . சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு காரணமா அந்த நாடுஹளில் தடை செய்து விட்டார்கள். நம் நாடு தான் மசுபடபோகிறது . இந்தியாவை மாசுபடுத்த முடிவு செய்து விட்டார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X