வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்றவர், போலீஸ் ஸ்டேசனில் சந்தேகமான முறையில் மரணமடைந்தார். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 101 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.