சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியிடம் கிண்டல் கண்டித்த கணவருக்கு அடி

Added : ஜூன் 28, 2015
Share
Advertisement
திருவான்மியூர்: மனைவியை கிண்டல் செய்த நபரை தட்டி கேட்ட கணவரை, கம்பியால் தாக்கிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர், லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 40. துரைப்பாக்கத்தில் பெயின்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மனைவியை, எதிர் வீட்டில் உள்ள டேவிட், 38, என்பவர் கிண்டல் செய்து உள்ளார். அதை, சீனிவாசன் தட்டி கேட்டு உள்ளார். நேற்று முன்தினம், கிண்டல்

திருவான்மியூர்: மனைவியை கிண்டல் செய்த நபரை தட்டி கேட்ட கணவரை, கம்பியால் தாக்கிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர், லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 40. துரைப்பாக்கத்தில் பெயின்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மனைவியை, எதிர் வீட்டில் உள்ள டேவிட், 38, என்பவர் கிண்டல் செய்து உள்ளார். அதை, சீனிவாசன் தட்டி கேட்டு உள்ளார். நேற்று முன்தினம், கிண்டல் செய்தபோது, அதை தட்டி கேட்க அவர் வீட்டுக்கு சென்றார். அப்போது, டேவிட் அவரது உறவினர்கள் குமார், 30, ரமேஷ், 47, ஆகியோர் சேர்ந்து, சீனிவாசனை கம்பியால் தலையில் தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த சீனிவாசன், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீனிவாசன் அளித்த புகாரையடுத்து, திருவான்மியூர் போலீசார், டேவிட், குமார், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X