சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்பூர் கலவரம் விவகாரம் :இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Added : ஜூன் 28, 2015
Advertisement

வேலூர்: ஆம்பூரில் நடந்த கலவரம் தொடர்பான விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.போலீஸ் விசாரணைக்கு சென்ற, ஆம்பூரைச் சேர்ந்த ஜமில் அகமது, மர்மமாக இறந்ததால், ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்திற்கு காரணமான, 200க்கும் மேற்பட்டோரை, ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம், வாணியம்பாடி அடுத்த உம்மராபாத்தில், மதியம், 2 மணிக்கு நடந்தது.இதற்கிடையே, "தன் மனைவி பவித்திராவை கண்டுபிடித்து தர வேண்டும்' என, ஆம்பூர் அடுத்த, துத்திப்பாளையத்தைச் சேர்ந்த பழனி, கலவரத்தை பார்வையிட ஆம்பூர் வந்த ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார்.கலவர விவகாரத்தில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜை, வேலூர் சரக டி.ஜி.பி., அசோக்குமார், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக, வேலூர் மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X