பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை முறை கொசு ஒழிப்பு திண்டுக்கல்லில் அறிமுகம்

Added : ஜூலை 03, 2015 | கருத்துகள் (1)
Advertisement
இயற்கை முறை கொசு ஒழிப்பு திண்டுக்கல்லில் அறிமுகம்

திண்டுக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக டெங்கு, மலேரியா நோய்களை பரப்பும் முதிர் கொசுக்களை ஒழிக்கும், 'இயற்கை முறை கொசு ஒழிப்பு திட்டம்' திண்டுக்கல்லில் அறிமுகமாகியுள்ளது.மாநில நகராட்சி நிர்வாக இயக்குனர் பிரகாஷ் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இயற்கை முறை சுகாதார திட்டங்கள் நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில், பள்ளி குழந்தைகள், கல்லுாரி மாணவ - மாணவிகள், பொதுமக்களுக்கு 'நிலவேம்பு கஷாயம் வழங்குதல், இயற்கை முறை கொசு ஒழிப்பு' உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகமாயின.இதில், மதுரை, கோயம்புத்துார், திண்டுக்கல், திருச்சி, சென்னை, திருநெல்வேலி மாநகராட்சிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணிகள் முழுவீச்சில் துவங்கின. ஆனால், இயற்கை முறை கொசு ஒழிப்பு முறை எங்கும் துவங்கவில்லை. மாநிலத்திலேயே முதன் முறையாக 'இயற்கை முறை கொசு ஒழிப்பு திட்டம்' நேற்று திண்டுக்கல்லில் துவங்கியது. நொச்சித்தழை, வேப்பந்தழை, சாம்பிராணி உள்ளிட்டவை மூலம் இயற்கை முறையில் புகை மூட்டம் போட்டு கொசுக்களை விரட்டினர். 'நாக் அவுட்' பாய்ஷன் (மூச்சுத்திணறி மயக்கமடைந்து இறக்க செய்தல்) எனப்படும் இம்முறையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் முதிர் கொசுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். திண்டுக்கல் மாநகராட்சியில் 200 துப்புரவு ஊழியர்களோடு, 18 சுகாதார ஆய்வாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா கூறியதாவது: 'நாக் அவுட்' என்பது மூச்சுத்திணறி இறப்பதை குறிக்கும். நம் மூதாதையர்கள் வீட்டில் நொச்சி, வேப்பந்தழைகளை கிருமி நாசினியாக பயன்படுத்தினர். அந்த முறை தற்போது பயன்பாட்டில் இல்லை. இதை செயல்படுத்த மாநில நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே தெருத்தெருவாக, வீடு வீடாக, இத்திட்டம் செயல்படுத்தடப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
annaidhesam - karur,இந்தியா
03-ஜூலை-201507:36:54 IST Report Abuse
annaidhesam வரவேற்கப்பட வேண்டிய விஷயம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X