அழிவின் விளிம்பில் மலை நெல்லிக்காய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழிவின் விளிம்பில் மலை நெல்லிக்காய்

Added : ஜூலை 03, 2015
Advertisement

தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள மலை நெல்லிக்கு மறு வாழ்வு அளிக்க வனத்துறை நடவடிக்கை வேண்டும். நெல்லிக்காயில் விட்டமின்-சி அதிகமாக காணப்படுகிறது. ஒரு பழத்திலிருந்து 650 முதல் 700 மில்லி கிராம் உயிர்சத்து சி அடங்கியுள்ளது மேலும் மலை நெல்லியில் கூடுதலாக பொட்டாஷ் சத்தும் உள்ளது. தற்போது ஒட்டுரக நெல்லிக்காய் சந்தையில் வந்தப் போதும், இயற்கை சூழலில் ரசாயான கலப்பின்றி வனத்திலிருந்து கிடைக்கும் மலை நெல்லி மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே. இனிப்பு சுவை குறைந்து துவர்ப்பு அதிகரித்து காணப்படும். வருடத்தில் 8 மாதங்கள் மகசூலில் பூவுடன் காணப்படும் மலை நெல்லிக்காய் மூலம் தேன் அதிகளவு கிடைக்கிறது. அதிகளவு மகசூல் காணும் மலை நெல்லி வனப்பகுதியில் அரிதாக எங்கே ஒரு மூளையில் காணும் நிலை உள்ளது. காரணம் காட்டுத் தீயாகும். தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியில் அழிந்து வரும் மலை நெல்லிக்காயை எண்ணிக்கையை அதிகரிக்க மென் திசு ஒட்டு முறையில் கன்றுகள் தயார் செய்கின்றனர். மருத்துவ குணம் நிறைந்துள்ள மலை நெல்லிக்காய் மரங்களை பாதுகாத்து ஊக்குவிக்க வனத்துறை முயற்சித்தால் இயற்கை கொடுத்த உயிர்சத்து அனைவருக்கும் கிடைக்க ஏதுவாக அமையும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X