Pavitra found in Chennai | தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்: சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸ் Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

வேலுார்: ஆம்பூர் கலவரம் தொடர்பாக, தேடப்பட்டு வந்த பவித்ரா கிடைத்தார். சென்னையில் பதுங்கிஇருந்த அவரை, போலீசார் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின், பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டார்.


வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனி; இவரது மனைவி பவித்ரா. கடந்த மாதம், 24ம் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக, ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமில் அகமதுவை, விசாரணைக்காக பள்ளிகொண்டா போலீசார் அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. பின், வீட்டிற்கு திரும்பிய ஜமில் அகமது உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி, கடந்த, 26ம் தேதி இறந்தார்.

ஜமில் அகமதுவின் மரணம் தொடர்பாக, மறுநாளான, 27ம் தேதி நள்ளிரவு, ஆம்பூரில் நடந்த போராட்டம், பயங்கர கலவரமாக மாறியது. இதில், அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன; போலீஸ் ஜீப்கள், தனியார் வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில், 54 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுவரை, 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இன்னமும் உண்மையான குற்றவாளிகள், தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம்பூரில் பதற்றமான நிலை நீடிப்பதால், போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 'கலவரத்துக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் போலீசாரை, இந்து இயக்கத் தலைவர்கள் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்; கலவரத்தில்

பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, ஆம்பூரில் நேற்று முன்தினம் கடையடைப்பு நடந்தது.அதேநேரத்தில், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமான, இளம்பெண் பவித்ரா திடீரென மாயமானார். அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்பது குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. அதனால், அவரை கண்டுபிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில், 'பவித்ராவை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, அவரது கணவர் பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பவித்ராவை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், அவரின் மொபைல் போன் எண் தொடர்புகள் அடிப்படையில், விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு வந்த போலீசார், அம்பத்துார் பகுதியில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, பவித்ராவை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அம்பத்துாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், வேலை செய்து வருவதாகவும், இரு வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். உடன், சென்னை கிண்டியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த, இரு வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர்,
அரக்கோணம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்; மற்றொருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேந்திரன். இதையடுத்து, நேற்று மதியம், 12:30 மணிக்கு, அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு, பவித்ராவை கொண்டு வந்த போலீசார், அங்கு பிற்பகல், 3:00 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலுார் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரியும் உடனிருந்தார்.

பின், மாலை, 5:00 மணிக்கு வேலுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன் ஆஜர்படுத்தினர். பவித்ராவை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை மகளிர் காப்பத்தில் தங்கவைக்கும்படியும், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.இதையடுத்து, வேலுார் அடுத்த அரியூர் கிராமத்திலுள்ள, தொண்டு

நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில், பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், பவித்ராவுக்கு உதவிய சரவணன் மற்றும் சுரேந்திரனை, அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தப்பாக சித்தரிக்கிறது:

அரியூர் பெண்கள் விடுதியில் உள்ள பவித்ரா, நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர்,” என்றார்.

'ஜமிலுடன் கள்ளத்தொடர்பு உண்டு':

ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியதாவது:
இறந்து போன ஜமில் அகமது மற்றும் பவித்ரா இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். அப்போது, பவித்ராவின் கணவர் பழனி, தன்
மனைவியை ஜமில் அகமது கடத்திச் சென்று விட்டதாக, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார்.இதை அறிந்த ஜமில் அகமது, ஈரோட்டில் உள்ள வாடகை வீட்டை காலி செய்து விட்டு, பவித்ராவிடம், 300 ரூபாய் கொடுத்து, அவரை ரயில் ஏற்றி அனுப்பி உள்ளார். பவித்ரா சொந்த ஊருக்கு வராமல், வேலை தேடி சென்னைக்கு சென்று விட்டார்.இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இருந்தும், 'ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. எந்த உறவும் இல்லை' என, நிருபர்களிடம், அவர் பொய் சொல்கிறார். பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாமி - மதுரை,இந்தியா
06-ஜூலை-201523:10:34 IST Report Abuse

சாமிஇந்த பெண்ணை தேடி காவல் நிலையம் போனதுக்கு பதில் அவரது கணவர் பழனி, சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் அவர்களிடம் போயிருக்கலாம். இந்த பென் முகத்திலேயே தெரியுது இவர் எப்படி என்று

Rate this:
vasan pon - Chennai,இந்தியா
06-ஜூலை-201521:46:43 IST Report Abuse

vasan ponஇங்கே சிலர் இப்பெண்ணை திட்டுகிறார்கள். ஆனால் திரையிலும் அரசியலிலும் உள்ள பிரபலங்களுக்கு ரசிகர்களாக தொண்டர்களாக உள்ளார்கள். இப்பெண்ணுக்கு ஒரு நியாயம் பிரபலமானவர்களுக்கு ஒரு நியாயமா? பிரபலமானவர்களுக்கு தண்டனை கெடைக்காத வரை அடித்தட்டு மக்களும் குற்றம் புரிந்து கொண்டு தான் இருப்பார்கள்.

Rate this:
Thevarajan Karunakaran - Colombo,இலங்கை
06-ஜூலை-201521:26:35 IST Report Abuse

Thevarajan Karunakaranதிருமண உறவுக்கு புறம்பான உறவுக்கு என்ன தண்டனை என்று இருவரும் அறிந்திருக்க வேண்டும். இப்போதைய பிரச்சினை சகில் அகமது எவ்வாறு இறந்தார் என்பதே. மருத்துவ அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. பவித்ரா கடத்தப்படவில்லை. மாறாக சுயவிருப்பத்தின் படியே அவருடன் சென்று உள்ளார். சகில் அகமதுவின் இறப்புக்கு யார் பொறுப்பு.

Rate this:
Jay - Bhavani,இந்தியா
06-ஜூலை-201519:18:41 IST Report Abuse

Jayஎன்னம்மா, இப்படி பண்றீங்களேமா ?

Rate this:
Chella Pandian - cbe,இந்தியா
06-ஜூலை-201517:45:06 IST Report Abuse

Chella Pandianகலவரத்தில் பாதிக்கபாட்டவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் கலவரம் செய்தவர்கள். ஜனநாயக முறை போராட்டங்கள் என்று ஒன்று உள்ளதே அதை கொஞ்சம் கூட இந்த இஸ்லாமிய பெருமக்கள் யோசித்துகூட பார்பதில்லையோ

Rate this:
Velai - Ahmadabad,இந்தியா
06-ஜூலை-201519:42:09 IST Report Abuse

Velai இவங்களை பெரு மக்கள் என்று நா கூசாமல் எப்படி கூறுகிறீர்கள்....

Rate this:
$$$$ - $$$$,இந்தியா
06-ஜூலை-201520:25:50 IST Report Abuse

$$$$இதுல என்னய்யா பெருமக்கள் ?...

Rate this:
சாமி - மதுரை,இந்தியா
06-ஜூலை-201521:37:51 IST Report Abuse

சாமிஎனக்கு ஜமில் அகமதுவை தெரியாது பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. /// இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் போலிஸ்கள் ?? ஜமில் அகமது குடும்பத்துக்கு என்ன பதில் ? நமக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாமா?? தப்பு யார் செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் ,,...

Rate this:
paavapattajanam - chennai,இந்தியா
06-ஜூலை-201517:37:02 IST Report Abuse

paavapattajanamகற்புக்கு கண்ணகி என்று சிலை வச்சாச்சு - ஏதோ கொஞ்ச பெண்கள் இன்னும் அதை காப்பாற்றுகிறார்கள் - விடுங்கள் - ஒரு சில ஜென்மங்களை - நல்லதை நினைப்போம் - ஜெய் ஹிந்த்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
06-ஜூலை-201517:06:28 IST Report Abuse

இந்தியன் kumarதவறானவர்களுக்கு நடத்தப்பட்ட தவறான கலவரம், எல்லா தப்புகளுக்கும் ஜாதி, மதத்தை முன் நிறுத்தாதீர்கள் வாழ்க பாரதம்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
06-ஜூலை-201515:51:54 IST Report Abuse

Balajiஜாமீலின் பிரேதப்பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது என்றே இது வரை செய்தியில்லை..... இப்படி நாம் காவலர்கள் தாக்கியதால் தான் உயிரிழந்தார் என்று கூறமுடியும்..... வழக்கை திசை திருப்பும் வேளையில் கூட போலீஸ் ஈடுபட்டுயிருக்க வாய்ப்புள்ளது..... இந்த பெண்ணும் சாதாரமானவராக தோன்றவில்லை...... இவர் ஏன் கணவனுக்கு தெரியாமல் வேலை செய்ய வெளியூர் செல்லவேண்டும்..... தலையும் புரியல வாலும் புரியலை..... நியாமான முறையில் விசாரணை செய்து உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கவேண்டியது போலிசின் கடமை......

Rate this:
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
06-ஜூலை-201515:17:25 IST Report Abuse

Selvam Pillaiஇதில் முதல் மன்னிக்க முடியாத தவறு போலீசுடையது. அப்படியே அந்தப்பெண் அவருடன் ஓடி இருந்தாலும். இருவரையும் பிடித்து விசாரிக்க வேண்டும். அதை விட்டு ஜமீலை மட்டும் பிடித்து எந்த வித ஆதாரமும் இல்லாமல் போலீஸ் அடித்து கொன்றது அயோக்ய தனம் மட்டுமல்ல அவர்களை கேட்பதற்கு ஆள் இல்லை என்ற ரவுடிதனமுமாகும். இப்போது அந்த பெண்ணே கூறிவிட்டார் எனக்கு ஜமீலை தெரியாது என்று. இப்போது அந்த இன்ஸ்பெக்டரை கோர்ட் என்ன செய்ய போகிறது. பதவி நீக்கம் மட்டுமல்ல உள்ளே பிடித்து போடவேண்டும். இல்லாவிட்டால் அவர் உயிருக்கு நிச்சயம் ஆபத்து.

Rate this:
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூலை-201514:54:24 IST Report Abuse

 Palanivel Naattaar''ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே சாவதும் பெண்ணாலே'' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X