பவித்ரா மதம் மாற்றப்பட்டதாக "திடுக் தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை| Dinamalar

பவித்ரா மதம் மாற்றப்பட்டதாக "திடுக்' தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை

Added : ஜூலை 07, 2015 | |
வேலூர்: ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீஸார் மீட்டுள்ள நிலையில், அவர், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த, 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பாளையம் பழனி மனைவி பவித்ரா. இவருக்கு, ஆம்பூர், ஜமில் அகமது என்பவருடன் கள்ளக்காதல்

வேலூர்: ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீஸார் மீட்டுள்ள நிலையில், அவர், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த, 11 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பாளையம் பழனி மனைவி பவித்ரா. இவருக்கு, ஆம்பூர், ஜமில் அகமது என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்ட விவகாரத்தில், போலீஸ் விசாரணைக்கு பின் ஜமில்அகமது மர்மமாக இறந்தார். இதனால், ஆம்பூரில் பெரும் கலவரம் ஏற்பட்டு, தற்போது, ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று, கடந்த, சில வாரங்களாக மாயமாக இருந்த பவித்ராவை, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆம்பூர் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே, பவித்ரா குறித்து, பல்வேறு தகவல்கள் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், பவித்ராவின் பழைய காதலர்கள் என, கூறப்படும், அரக்கோணம் சரவணன், 26, சென்னை குன்றத்தூர் மனோகரன், 34, காட்பாடி சரவணபெருமாள், 40, ஈரோடு சசிதரன், 34, ஆரணி செங்கமலம், 35, உள்பட, 11 பேரிடம் போலீஸார், நேற்று விசாரணை செய்தனர்.
இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறியதாவது:
ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா, குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார். அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன், பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், "எதுவும் தெரியாது' என, பலரிடம் தெரிவித்து வருகிறார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவரது அழகுக்கு மயங்கி, அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால், ஜமில்அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும், பவித்ரா கணவர் பழனி கூறியதாவது:
என் அக்காள் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அவரது சித்தி மகள் வேலைக்கு செல்வதை பார்த்து, பவித்ராவும் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஜமில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், என் வீட்டில் தனிமையில் இருந்தனர். இதையறிந்த நான், பவித்ராவை கண்டித்தேன். இதனால், ஜமில்அகமதுவுடன் சென்று விட்டார். பவித்ராவை பிரிந்து வாடும் எனக்கும், குழந்தைக்கும் நிம்மதி இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X