ஒரே ஒரு பினாமி... சுருட்டுவதில் அவர் சுனாமி!| Dinamalar

ஒரே ஒரு பினாமி... சுருட்டுவதில் அவர் சுனாமி!

Added : ஜூலை 07, 2015
Share
கையில் பெரிய பட்டியலை வைத்துக் கொண்டு, விரல் விட்டு எண்ணிக்கொண்டே, பெயர்களை 'டிக்' செய்து கொண்டிருந்தாள் மித்ரா.''என்னடி மித்து! இன்னும் கிளம்பலையா...இதென்ன பெருசா ஒரு 'லிஸ்ட்' வச்சிருக்க. நீயும் வசூல்ல இறங்கீட்டியா?'' என்று கேட்டுக் கொண்டே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''ஆமாக்கா! என் 'பிரண்ட்'டோட கல்யாணத்துக்கு நல்லதா ஒரு 'கிப்ட்'
ஒரே ஒரு பினாமி... சுருட்டுவதில் அவர் சுனாமி!

கையில் பெரிய பட்டியலை வைத்துக் கொண்டு, விரல் விட்டு எண்ணிக்கொண்டே, பெயர்களை 'டிக்' செய்து கொண்டிருந்தாள் மித்ரா.
''என்னடி மித்து! இன்னும் கிளம்பலையா...இதென்ன பெருசா ஒரு 'லிஸ்ட்' வச்சிருக்க. நீயும் வசூல்ல இறங்கீட்டியா?'' என்று கேட்டுக் கொண்டே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
''ஆமாக்கா! என் 'பிரண்ட்'டோட கல்யாணத்துக்கு நல்லதா ஒரு 'கிப்ட்' வாங்குறதுக்காக, எங்க நட்பு வட்டத்துல நான் தான் வசூல் பண்ணிட்டு இருக்கேன். அந்த லிஸ்ட்...'' என்றாள் மித்ரா.
''கல்யாணத்துக்கு 'லிஸ்ட்' போட்டு வசூல் பண்றதுக்கு,
நீ என்ன ஐ.எஸ்.,ல ஆபீசரா இருக்கியா?'' என்று கேட்டாள் சித்ரா.
''என்னக்கா... வந்ததுமே, நியூஸ் வாசிக்க ஆரம்பிச்சிட்ட... நீ சொல்றது, நடக்காமப் போன கல்யாண மேட்டர் தான... அதுக்காக
வசூல் நடந்துச்சா''
''ஆமாடி...! நம்மூர்ல இருக்கிற அந்த ஐ.எஸ்., ஆபீசர், இந்த மாசக்கடைசியில 'ரிட்டயர்டு' ஆகப் போறாரு. ஏற்கனவே, போன வருஷம் தீயா வசூல் பண்ணி, ஒரு பொண்ணு கல்யாணத்தை, செமையா, கிராண்டியா முடிச்சாரு. இப்போ, 'ரிட்டயர்டு' ஆவுறதுக்கு முன்னாடி ரெண்டாவது பொண்ணுக்கு முடிச்சிரணும்னு, அவசர அவசரமா வசூல் பண்ணிட்டு இருந்தாரு''
''அடடா...! அது தான் நின்னு போச்சா. எத்தனை பேரு வயித்தெரிச்சலோட காசைக் கொடுத்தாங்களோ? அது சரி...எவ்ளோ வசூலாச்சான்னு தெரியுமா?''
''அரை 'சி' வரைக்கும் வசூல் பண்ணதா கேள்விப்பட்டேன்.மாப்பிள்ளைக்கு பிஎம்டபிள்யு கார் வாங்குறதுக்கு ஏற்பாடு நடந்துச்சாம். அதுக்குள்ள, இன்னொரு பொண்ணு, பிரச்னையக் கிளப்புனதுல, கல்யாணமே நின்னு போச்சு''
''அந்த பெங்களூரு பொண்ணை இவர் மிரட்டுனதா, 'கம்பிளைன்ட்' வந்திருக்கே. ஏதாவது 'ஆக்ஷன்' எடுப்பாங்களா?'' என்றாள் மித்ரா.
''தெரியலை... ஆனா, இந்த பதவியில இருந்துட்டு, அவர் சிட்டிக்குள்ள எத்தனை பேரை மிரட்டி, என்னென்ன வசூல் பண்ணுனாரு, எங்கெங்க சொத்து வாங்குனார்னு ஒவ்வொரு தகவலா வெளிய வந்துட்டு இருக்கு'' என்றாள் சித்ரா.
''ரெண்டு பொண்ணுங்களுமே பாவம்க்கா... அந்த வகையில, கல்யாணத்துக்கு முன்னாடியே, இந்த விஷயம் தெரிஞ்சதால, நம்மூருப் பொண்ணு தப்பிச்சிருச்சு.
கோட்டான கோடி நன்றி...''
என்று மேலே கையைக் குவித்தாள் மித்ரா.
''கல்யாணம் நின்னதால, வசூலை திருப்பிக் கொடுப்பாரான்னு தெரியலை. ஆனா, இவரை விட, கோடிகள்ல கொள்ளை அடிச்ச உயர்ந்த மனிதன் இன்ஜினியரு, சம்பாதிச்சதை வச்சே, பல பேரை 'காசால' அடிச்சு, சத்தமே இல்லாம 'ரிட்டயர்டு' ஆயிட்டாரே'' என்றாள் சித்ரா.
''என்ன தப்புப் பண்ணுனாலும், காசிருந்தா தப்பிச்சிரலாம்கிற மாதிரி ஆயிருச்சு. 122 ஆடிட் அப்ஜெக்ஷனை, 'ஒண்ணுமேயில்லை'ன்னு சொல்லிட்டாங்க. என்ன நிர்வாகம் நடக்குது இங்க...சீ...''என்று கொந்தளித்தாள் மித்ரா.
''மித்து... எலும்புக் கூடு மாதிரி மூணு இரும்புக் கூட்டை கொண்டு வந்து 'இதான் அந்த 3 லாரி'ன்னு காமிச்சிட்டு, அந்த இன்ஜினியரு 'எஸ்கேப்' ஆயிட்டாரு. அந்த ஊழல்ல சம்மந்தப்பட்ட இன்னொரு இன்ஜினியர், இப்போ அந்த லாரிக சம்மந்தமான ஃபைலையே 'க்ளோஸ்' பண்றதுக்கு முயற்சி பண்றாராம்''
''கடைசியில, குப்பை அள்ள வாங்குன லாரிக, குப்பையே அள்ளாம, குப்பைக்குப் போகப்போகுதுன்னு சொல்லு''
''இப்பவாவது, அந்த இன்ஜினியர் மேல நடவடிக்கை
எடுத்தா நல்லாயிருக்கும். ஆனா, கார்ப்பரேஷனே, கரப்ஷன்
ஆபீசர்ங்களோட கூடாரமாயிருச்சே'' என்றாள் சித்ரா.
''ஆனா, ஆளும்கட்சி வி.ஐ.பி., 'துணை'யோட இங்க வந்த ஆபீசரம்மா, யார்ட்டயும் கை நீட்றதில்லைன்னு சொல்றாங்களே. மெய்யாலுமா?'' என்றாள் மித்ரா.
''அது உண்மை தான். அவுங்க 'டைரக்ட்'டா வாங்குறதில்லை. அதுக்குன்னே மூணு பேர் கொண்ட குழு வச்சிருக்காங்க. ஏற்கனவே, ரெண்டு பேரைப் பத்தி நம்ம பேசுனோம்.
''மூணாவது ஆளு, வடக்குல வருவாய் பாக்குற பொறுப்புல இருக்கிறவரு. அவர் தான், முக்கியமான 'டீல்' எல்லாம் முடிக்கிறாராம்'' என்றாள் சித்ரா.
''அவுங்களைப் பத்தி இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். இன்ஸ்பெக்ஷனுக்குப் போற இடத்துல, தாறுமாறாப் பேசுறாங்களாம். திடீர்னு 'எம் புக்' கேக்குறாங்க. கொடுத்தா, மறு
படியும் 'எம் புக் எங்க'ன்னு கேட்டு அதிர வைக்கிறாங்களாம். எது 'எம் புக்'ன்னே தெரியாம, இப்பிடி ஒரு 'போஸ்ட்டிங்'ல உக்காந்திருக்காங்க. எல்லாம்... ஆளும்கட்சி செல்வாக்கு'' என்றாள் மித்ரா.
''நம்மூர்ல தான்...எதிர்க்கட்சிக்காரங்க என்ன ஆனாங்கன்னே தெரியலையே. டிஎம்கேல மீனா லோகு சத்தம் மட்டும் தான் கேக்குது''
''அது வேற ஒண்ணுமில்லக்கா. மூணு மாசமா, 'சஸ்பெண்ட்' பண்ணுனதால, கவுன்சில் மீட்டிங்குக்கு வர முடியலை. கட்சிக்காரங்களும் எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடுறதில்லை. எலக்ஷன் வருது... சீட் கேக்கோணும்... அதுக்கு தான், 'நானும் இருக்கேன்'லன்னு காமிக்கிறதுக்காக, ஸ்டூடண்ட்ஸ் மேல அக்கறை இருக்குறது மாதிரி, மீடியாக்கள் புடை சூழ, அசத்தலா ஒரு 'டிராமா' போட்டாங்க''
''கரெக்ட் மித்து...அந்த 'டைனிங் ஹாலை' ஏற்கனவே, மாணவர்களுக்குத் திறந்து விடச்சொல்லி, ஹெச்.எம்.,ட்ட மேயரு சொல்லிட்டாரு. உண்மையிலேயே, அதைத் திறக்கணும்கிறது தான், இவுங்க நோக்கம்னா, கவுன்சிலர்ங்கிற முறையில, கமிஷனர்ட்ட லெட்டர் கொடுத்திருக்கலாமே''
''இவுங்க மோதிக்கிறதெல்லாம், மக்களை ஏமாத்துறதுக்கு தான். சம்பாதிக்கிறதுல, அ.தி.மு.க.,- தி.மு.க.,காரங்களுக்குள்ள இருக்கிற கூட்டணியை யாராலயும் உடைக்கவே முடியாது''
''ஆனா, எதிர்க்கட்சிக்காரங்களை ஆளும்கட்சிக்காரங்க ஏமாத்துறது சர்வ சாதாரணமா நடக்குது'' என்றாள் சித்ரா.
''ஏன்க்கா...நம்மூர்ல யாராவது அப்பிடி ஏமாத்திருக்காங்களா?'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து...போன வருஷம் தேர்தல் நடந்தப்போ, டிஎம்கே வேட்பாளர் பக்கத்துலயே உக்கார மாட்டேன்னு எம்பி எம்பி குதிச்சாரே நம்மூரு ராசா...அவரு...எலக்ஷன் நேரத்துல, மணியக்காரம்பாளையத்துல இருக்கிற டிஎம்கேகாரர் ஒருத்தர்ட்ட அம்பது லட்ச ரூபா, வட்டிக்கு வாங்கிருக்காரு. ஜெயிச்சு, ஒரு வருஷமாகியும் இன்னும் கொடுக்கலையாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...நீ எம்பி எம்பி குதிச்சவரைப் பத்திச் சொன்னதும்,
நம்மூருக்கு அடிக்கடி வர்ற பிஜேபி எம்.பி., ஞாபகம் வந்துச்சு'' என்றாள் மித்ரா.
''ஏய்...அவரு மத்திய அமைச்சர்டி...அவருக்கு என்ன ஆச்சு?''
''அவருக்கு என்னாச்சுன்னு தெரியலை. ஆனா, ஏதோ ஒரு 'ட்ரீட்மென்ட்'டுக்காக, மருதமலை அடிவாரத்துல இருக்கிற இயற்கை வைத்திய நிலையத்துக்கு
அடிக்கடி வர்றாராம்''
''சமீபமா, பிஜேபி தலைங்க கோயம்புத்துாருக்கு அடிக்கடி வர்றாங்க. யாரு வந்தாலும், கொலைக்கேசுல மாட்டுன லேடி கவுன்சிலர் தான், முன்னாடி தெரியுறாங்க. தினமும் ஸ்டேஷன்ல போய், கையெழுத்துப் போடுறவங்களை, இப்பிடி முன்னுக்கு நிறுத்துறாங்களேன்னு, கட்சிக்காரங்க சூடாயிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''ஸ்டேஷன்னு சொன்னதும், பி 8 ஸ்டேஷன் மேட்டர் ஞாபகம் வந்துச்சுக்கா... அங்க இருக்கிற இன்ஸ்பெக்டர், ரொம்ப நல்லவருதான். ஆனா, 'சைபர் க்ரைம்' கேசுகளுக்காக, அவரு அடிக்கடி வெளியூர் போயிடுறாரு. அதனால, அந்த ஸ்டேஷன் லிமிட்ல எல்லா 'இல்லீகல்' வேலையும் எக்குத்தப்பா நடக்குது'' என்றாள் மித்ரா.
''அவருக்குக் கீழ யாராவது ஆபீசர் இருப்பாங்களே...!'' என்றாள் சித்ரா.
''அவுங்களால தான் பிரச்னையே. திடீர்னு புதுசா மூணு திருட்டு 'விசிடி' கடை முளைச்சிருக்கு. ஒரு நம்பர் லாட்டரி ரெண்டு இடத்துல ஓடுதாம். தினரும் ஒரு லட்ச ரூபா வியாபாரம் நடக்குதாம்'' என்றாள் மித்ரா.
''மித்து! நம்மூர்ல ஒரு யுனிவர்சிட்டியில போராட்டம் நடந்துட்டு இருக்கே. அதைப் பத்தி ஏகப்பட்ட 'கம்பிளைன்ட்' வந்துட்டே இருக்கு. யுஜிசி மானியத்தை வாங்கி, 'செல்ஃப் பைனான்சிங்' காலேஜ்க்கு ஏகமா செலவு பண்ணிருக்காங்க. கிட்டத்தட்ட, 24 கோடி ரூபாய்க்கு, இப்பிடி முறைகேடு நடந்திருக்குன்னு, 'ஆடிட்'ல கண்டு பிடிச்சிருக்கிறதா ஒரு தகவல்'' என்றாள் சித்ரா.
''ஆனா, கார்ப்பரேஷன்ல ஆளும்கட்சி வி.ஐ.பி.,யோட 'பினாமி' கான்ட்ராக்டர், நுாறு கோடி ரூபா வேலைகளை சுனாமி மாதிரி ஒரே ஆளா சுருட்டிட்டாரே...இதெல்லாம் 'ஆடிட்'ல பிடிக்க மாட்டாங்களா?''
என்றாள் மித்ரா.
''நீ சொல்றது பழைய தகவல். இப்போ, கார்ப்பரேஷன் சாப்ட்வேரை கவனிச்சிட்டு இருந்த ஐ.டி.,கம்பெனியவே, வெளிய அனுப்பிட்டாங்க. அதுவும், இவர் கைக்கு தான் போயிருக்கு. என்னென்ன நடக்கப்போகுதோ?'' என்ற சித்ரா, 'ஏய்! டைம் ஆகுதுடி, கிளம்பலாம்' என்றாள்.
''அக்கா! அஞ்சே நிமிஷம்...'லெமன் டீ' போட்டு வர்றேன். குடிச்சிட்டு தெம்பா கிளம்பலாம்'' என்று அடுக்களைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X