தமிழ்நாடு

விடுபட்டோருக்கு சிறப்பு ஆதார் முகாம்; பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : ஜூலை 08, 2015 | கருத்துகள் (2)
Advertisement

திருப்பூர் : "ஓய்வூதியம் பெறுவோருக்கு உடனுக்குடன் மேற்கொள்வதைபோல், விடுபட்டோருக்கும் சிறப்பு முகாம் நடத்தி, விரைவாக ஆதார் அட்டை வழங்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் நீங்கலாக, 23.13 லட்சம் பேருக்கு ஆதார் பதிவு செய்வதற்கு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விடுபட்டோருக்காக, தாலுகா அலுவல கங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில், நிரந்தர முகாம் நடத்தப்படுகிறது. அதில், பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டும் பதிவு நடக்கிறது; பட்டியலில் இல்லாதவர்கள், வெளியூரில் இருந்து இடம் மாறி வந்தவர்கள், புதிதாக விண்ணப்பித்தவர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். கடந்த வார நிலவரப்படி, 66 சதவீதத்தினருக்கு மட்டுமே, ஆதார் பதிவு நடந்துள்ளது. இப்பணியை, வருவாய் துறையினரோ, உள்ளாட்சி அமைப்பினரோ கண்டுகொள்ளாமல் இருப்பதால், பொதுமக்களின் வேதனை தொடர்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது வைத்துள்ளவர்களுக்கு, 2017 வரை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவுக்கு கொடுத்த விண்ணப்பங்கள், கிடப்பிலேயே உள்ளன. "விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, மொபைல் எண்ணுக்கு தகவல் வரும். அதன்பின் வந்து, டோக்கன் பெற்றுக்கொண்டு, அந்தந்த தேதிகளில் பதிவு செய்யலாம்,' என்றனர். கடந்த ஆறு மாதங்களில், விண்ணப்பம் அளித்தவர்களுக்கு, இன்னும் பதிவு நடக்கவில்லை.ஏற்கனவே பதிவு செய்தவர்கள், அட்டை கிடைக்காதவர்கள், மக்கள் தொகை கணக்கு ரசீது இருப்பவர்களுக்கு மட்டுமே, உடற்கூறு பதிவு நடக்கிறது. முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, உடனுக்குடன் பதிவு செய்கின்றன. அதேபோல், சிறப்பு முகாம் நடத்தி, பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கும், உடனுக்குடன் உடற்கூறு பதிவு செய்ய வேண்டும்இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பக்கத்து வீட்டு எண் தெரியுமா?ஆதார் பதிவுக்கு காத்திருப்போரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீதை தொலைத்தவர்கள், அப்போது வசித்த இடத்துக்குச் சென்று, பக்கத்து வீட்டில் வசித்தவர்களின் எண்களை பெற்று, பட்டியலில் தங்களது பெயர்களை கண்டறிந்து, பதிவை மேற்கொள்ளலாம். உடற்கூறு பதிவு செய்து கார்டு கிடைக்காதவர்கள், பதிவு ரசீதை பயன்படுத்தி, கம்ப்யூட்டர் மையங்களில் ஆதார் அட்டையை பதவிறக்கம் செய்யலாம்.ஆதார் அட்டை கிடைக்கவில்லை எனில், ரசீதை பயன்படுத்தி, மீண்டும் உடற்கூறு பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்தபோது ரசீது கிடைக்காதவர்கள், குடும்ப உறுப்பினர் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் ரசீதில் உள்ள மக்கள் தொகை பதிவேடு எண்ணை பயன்படுத்தி, மீண்டும் பதிவு செய்யலாம். மாறாக, அட்டை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அது பயனளிக்காது என, ஆதார் பணியில் ஈடுபட்டுள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கலெக்டர் அலுவலகத்தில், ஆதார் பணி குறித்த ஆய்வு நடந்தது. அப்போது, "வருவாய்த்துறை அலுவலர்கள், ஆதார் பதிவு பணிக்கு, ஒத்துழைக்க வேண்டும். ஆதார் பணியை இன்னும் எளிதாக்க வேண்டும்,' என, கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Ramasamy - VELLORE ,இந்தியா
09-ஜூலை-201502:31:08 IST Report Abuse
V.Ramasamy மொபைல் van ல் உரிய வசதிகள் செய்து குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பயன் அடையும் வகையில் தினசரி ஒரு இடம்,village அனுப்பி குறைகள் இல்லாமல் செய்யலாம் . ஒரு தடவை 100 சதவீதம் பதிவு ஆன பின் நிரந்தர முகாம்கள் மட்டும் இருந்தால் போதும்.எல்லாவற்றுக்கும் ஆதர் வந்து விட்டால் மோசடி பேர்வழிகளுக்கு தான் நஷ்டம் எனவே தான் பிரச்னை.
Rate this:
Share this comment
Cancel
raja ram - chennai,இந்தியா
08-ஜூலை-201519:45:56 IST Report Abuse
raja ram ஆதார் அட்டைக்காக பொது மக்கள் படும் எல்லை இல்லா அவதிகளுக்கு மோடியின் தலை போகும் தீவிரப் போக்கு ஒரு புறம் - - தமிழ்நாடு அரசு ஆதார் அட்டை விஷயத்தில் அக்கறை இல்லாத போக்கால் விளைந்த பிரச்சினைகள் மறுபுறம் - மாட்டிக்கொண்டு அல்லல் படுபவர் பொது மக்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X