SC orders CBI probe into Vyapam scam | வியாபம்' ஊழலால் ம.பி., மாநில கவர்னருக்கு... நெருக்கடி:சி.பி.ஐ., விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

புதுடில்லி:மத்திய பிரதேசத்தில் நடந்த, 'வியாபம்' முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கும்படி, ம.பி., அரசுக்கும், அம்மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவுக்கும், மத்திய அரசுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டு உள்ளது. அதனால், கவர்னர் ராம் நரேஷ் யாதவுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.ம.பி.,யில், அரசுப் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய, 'வியாபம்' என்ற வாரியம் செயல்படுகிறது. இதில், 2007 - 13 ஆண்டுகளுக்கிடையே 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துஉள்ளதாக, எதிர்க்கட்சி கள் புகார் தெரிவித்தன. இந்த வழக்கை, ம.பி., மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில், கவர்னர் ராம் நரேஷ் யாதவின் பெயர், 10வதாக இடம் பிடித்துள்ளது.
இவர் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் உட்பட, 49 பேர், மர்மமான முறையில் இறந்தது, ம.பி.,யில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. அதனால், இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடந்த 7ம் தேதி பரிந்துரை செய்தார்.

காங்., உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், பொதுநல அமைப்புகள் சார்பிலும், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடவும், கவர்னர் ராம் நரேஷ் யாதவை, பதவிநீக்கம் செய்யவும், மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கவும் வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:'வியாபம் ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, ம.பி., அரசு தரப்பில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை' என, அட்டர்னி ஜெனரல் தெரிவித்து உள்ளார்; அவரின் வாதத்தை வரவேற்கிறோம்.
அதனால், வியாபம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கும்படி, ம.பி., அரசுக்கு, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது.


இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்துள்ளதால், ம.பி., ஐகோர்ட், இந்த வழக்கைதொடர்ந்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை.
'ம.பி., கவர்னர் ராம் நரேஷ் யாதவ், பதவி விலக வேண்டும்' என்ற, மனுதாரர்களின் கோரிக்கைதொடர்பாக,எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
ஆனாலும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அவர் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, ம.பி., அரசு, மத்திய அரசு, கவர்னர் ராம் நரேஷ் யாதவ் ஆகியோருக்கு, தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பஉத்தரவிடுகிறோம்.

வியாபம் முறைகேடு வழக்கில் தொடர்புடைய வர்கள், மர்ம மரணம் அடைந்துள்ளது கவலை தருகிறது. மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்களும், காங்., மூத்த தலைவர்களு மான, கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

* 'வியாபம்' முறைகேடு விவகாரத்தில், மர்ம மரணம் அடைந்த பத்திரிகையாளர், அஜய் சிங்கின் வீட்டுக்கு நேற்று சென்ற, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
* 'ம.பி., அரசிடமிருந்து எந்த உதவியையும் பெற, நாங்கள் விரும்பவில்லை' என, பத்திரிகையாளரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
* பத்திரிகையாளர் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த, முக்கிய குற்றவாளியான, ராகேஷ் நர்வானியை, ம.பி., போலீசார், நேற்று கைது செய்தனர்.
* இந்த வழக்கின் முக்கிய சாட்சியான, போலீஸ்காரர் சஞ்சய் சிங் யாதவ், உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த பிப்ரவரியில் இறந்ததாக, சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்து உள்ளது.
காங்.,தலைவர்களுக்கு,'சிவராஜ் சிங் போபியா' பிடித்துள்ளது. தினமும், ஐந்து முறையாவது, 'சிவராஜ் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்' என்கின்றனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கும்படி பரிந்துரைத்ததே நான் தான். மடியில் கனமில்லை; அதனால் பயமில்லை. நான் நினைத்திருந்தால், வியாபம் முறைகேடு குறித்த எந்த விசாரணையும் நடந்திருக்காது.
சிவராஜ் சிங் சவுகான் ம.பி., முதல்வர் - பா.ஜ.,
மோடி நாடு திரும்பியதும் நடவடிக்கை?: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியதை அடுத்து, மத்திய பிரதேச கவர்னர் பதவியிலிருந்து, ராம் நரேஷ் யாதவ் நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது. இருப்பினும்,

மத்திய ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து, பிரதமர் மோடி, நாடு திரும்பிய பின்னரே, இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ராம் நரேஷ், முன்னாள் பிரதமர் இந்திரா காலத்து ஆள்; காங்., தலைவர் சோனியாவின் தீவிர விசுவாசியும் கூட. வியாபம் ஊழலில் பெயர் அடிபட்டதுமே, ம.பி., மாநில காங்கிரஸ், இவரை பதவிநீக்கம் செய்யும் படி, கட்சி தலைமையிடம் கோரியது; அது நடக்கவில்லை.அரசு பணிகளுக்காக, பல கோடி ரூபாயை லஞ்சமாக, இவரும், இவரது மகன் சைலேஷும் பெற்றனர் என்பது தான் குற்றச்சாட்டு. இவர்களின் மோசடி அம்பலமானதும், லக்னோவில் உள்ள வீட்டில் சைலேஷ், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இன்னொரு மகனும், விசாரணை வளையத்தில் உள்ளார். கவர்னரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி
யாக இருந்த தன்ராஜ் என்பவரும், வியாபம் ஊழலில் கைதானவர்.இவ்வளவு சர்ச்சைகள் இருந்தும் கூட, கவர்னர் பதவியில் ராம் நரேஷ் யாதவ் நீடிப்பதற்கு, திரைமறைவு காரணங்கள் நிறைய உள்ளன. வியாபம் ஊழல், பிரம்மாண்டமானது. இதில், நிறைய பெருந்தலைகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இந்த விவரங்கள், கவர்னர் என்ற வகையில், ராம் நரேஷ் யாதவுக்கு முழுவதுமாக தெரியும். இதுபோன்ற காரணங்களால் தான், கவர்னர்பதவியில் அவர், தொடர்ந்து நீடித்து வந்துள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

ராம் நரேஷ் பின்னணி
ராம் நரேஷ் யாதவ் 1928 ஜூலை 1ல் உத்தர பிரதேசத்தின் அஜம்கார்ஹ் நகரில் பிறந்தார். 1977ல் காங்., சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சில மாதங்களில் (ஜூன் 23) உ.பி., முதல்வராக பதவியேற்றார். 1979 பிப்., 28ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் பதவியில் இருந்து விலகினார். 2004 லோக்சபா தேர்தலில் அஜம்கார்ஹ் லோக்சபா தொகுதியில் தோல்வியடைந்தார்.
பின், 2011 ஆக., 26ம் தேதி மத்திய பிரதேச கவர்னராக அப்போதைய ஐ.மு.,கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்டார். வியாபம் ஊழல் தொடர்பாக 2015 பிப்., 24ல் இவர் மீது வழக்குப் பதியப்பட்டது.பிப்., 25ல் இவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது; ஆனால் ராஜினாமா செய்யவில்லை. இவர் மகன் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தார்.இந்நிலையில் ராம்நரேஷ் யாதவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ம.பி., அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sp kumar - Chennai,இந்தியா
10-ஜூலை-201520:54:37 IST Report Abuse

sp kumarஇந்திரா பொறுப்பேற்றதும் தான் காங்கிரெஸ் கேட்டது . ஜால்ராக் கூட்டத்தை வளர்த்து நியமன தலைவர்களைப் போட்டு கட்சியையும் நாட்டையும் சீரழித்தது அவரே .

Rate this:
Young Prince - Bangalore,இந்தியா
10-ஜூலை-201517:29:09 IST Report Abuse

Young Princeநல்ல சோல்ல கொள்ள பொம்மை மாதிரி இருக்காரு

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-ஜூலை-201516:16:44 IST Report Abuse

இந்தியன் kumarவியாபதில் என்ன ஒரு வியாபாரமோ??? எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம் ,அம்மா நேர்மை என்றால் என்னா ???

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-ஜூலை-201516:08:48 IST Report Abuse

இந்தியன் kumarஇந்த காங்கிரஸ் காரர் மட்டும் எப்படி இவ்வளவு நாட்கள் கவர்னர் ஆக நீடித்தார். தூக்குங்கள் இவரை உடனே, காங்கிரஸ் எங்கு இருக்குமோ அங்கே ஊழலும் இருக்கும்

Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
10-ஜூலை-201510:01:16 IST Report Abuse

JAY JAY காமராசர் அன்றே சொன்னார் திமுகவையும், MGR காலத்து அதிமுகவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று...இன்று மத்தியில் அது நிருபணம் ஆகியுள்ளது... பாஜகவும் காங்கிரசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று... ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ... [ ஆனால் துரதிர்ஷ்டவசமாக , நமக்கு வாய்த்த பிரதமர்கள் மட்டும் ரொம்ப நல்லவர்களாக உள்ளனர்... MMS ம் மோடியும் மட்டுமே நல்லவர்களாக இருப்பது துரதிர்ஷ்டம் தானே.... ]... முன்பு சோனியா கண்காணிப்பிலும், இப்போது RSS கண்காணிப்பிலும் முறையே பிற காங்கிரசாரும், பிற பாஜகவினரும் தூள் பரத்துகிறார்கள்... மக்கள் தான் பாவம்...

Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
10-ஜூலை-201509:56:36 IST Report Abuse

JAY JAY இன்னும் இவரை காங்கிரஸ் காரர் என்று முத்திரை குத்துவது வெட்ககேடு....இவர் ஆளுநராக இருந்து ஊழல் செய்ததாக சொல்லப்படும் மாநிலம் ம பி ... அங்கு சவுகான் தான 12 வருடமா பாஜக சார்பில் முதல்வரா இருக்கிறார்... இப்போது சொல்லுங்கள், காங்கிரசும் பாஜகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே...

Rate this:
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
10-ஜூலை-201507:58:35 IST Report Abuse

தி.இரா.இராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு மெகா பிராடு.....

Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
10-ஜூலை-201509:53:06 IST Report Abuse

JAY JAY அட ராதா, ராதா, பாஜகவில அப்படியே எல்லாரும் உத்தமபுத்திரர்கள் பாருங்க.... பட்நாவிஸ், ராமன், சவுகான் , ராஜே என அனைத்து முதல்வர்களும் காங்கிரசை பீட் பண்ணிவிட்டார்கள் என்பது நோக்கு தெரியாதா?,....[ மோடியை தவிர பாஜகவிலும் அனைவரும் ஊழல்வாதிகள் என்று வெகுவிரைவில் நிருபணம் ஆகும்..MMS = மோடி ... பாவம் இருவருமே நல்லவர்கள்...இருவர் மட்டுமே....MMS நடவடிக்கை எடுக்கவில்லை... பார்ப்போம் மோடி என்ன செய்ய போகிறார் என்று....]...

Rate this:
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
10-ஜூலை-201507:57:25 IST Report Abuse

தி.இரா.இராதாகிருஷ்ணன் இவரை பார்த்தால் கவர்னர் மாளிகையில் காம லீலை செய்த கவர்னர் திவாரி மாதிரியே இருக்கிறார்.....

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
10-ஜூலை-201506:15:44 IST Report Abuse

N.Purushothamanஎன்னது கவர்னர் பத்தாம் இடத்தில இருக்கறாரா? காங்கிரஸ் அனுதாபியா இருக்க லாயக்கே இல்ல..முதல் இடத்தில இருக்க வேண்டியவர்.,..இதுக்கே ஒரு விசாரணை கமிஷன் போடணும்....

Rate this:
சாமி - மதுரை,இந்தியா
10-ஜூலை-201522:31:54 IST Report Abuse

சாமிஇவரை விட பாஜாக வினர் ஸ்பீடு அதிகம். அதனால் 10 இடம் 1முதல் 9 இடத்தை பாஜா கைப்பற்றி விட்டது...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
10-ஜூலை-201505:45:55 IST Report Abuse

K.Sugavanamகூட்டுக்கொ(ள்ளை)லை..

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X