கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை

Added : ஜூலை 11, 2015

திருப்பூர்:கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X