பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 21ல் காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்

Added : ஜூலை 15, 2015
Advertisement

நாமக்கல்: "இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான காடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, ஒரு நாள் இலவசப் பயிற்சி, ஜூலை, 21ம் தேதி நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:


நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான காடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம், ஜூலை, 21ம் தேதி நடக்கிறது. பயிற்சியில், ஜப்பானியக் காடை இனங்கள், கொட்டகை அமைத்தல், வளர்ப்பு முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.


மேலும், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு தேவையான தீவன அளவுகள், முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரிக்கும் விதம், நோய்களும் அதை தடுக்கும் முறைகளும் மற்றும் ஜப்பானியக் காடை உற்பத்தி பொருளாதாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்திற்கு, நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, ஜூலை, 20ம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள், ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X