நீரிழிவு நோயை தடுக்கும் மஞ்சள், ஒமேகா 3

Updated : ஜூலை 18, 2015 | Added : ஜூலை 18, 2015 | கருத்துகள் (11)
Share
Advertisement
சிட்னி: மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் வேதிப் பொருளும், சில வகை மீன்களில் இருக்கும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களும் நீரிழிவு நோயை வரவிடாமல் தடுப்பதாக சமீபத்ய ஆய்வுகள் மூலம் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் நியூகேஸ்டில் பல்கலை விஞ்ஞானிகள், இந்திய மரபு வழி மருத்துவ விஞ்ஞானி மனோகர் கார்க் தலைமையில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை
 மஞ்சளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் நீரிழிவு நோயை தடுக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சிட்னி: மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் வேதிப் பொருளும், சில வகை மீன்களில் இருக்கும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களும் நீரிழிவு நோயை வரவிடாமல் தடுப்பதாக சமீபத்ய ஆய்வுகள் மூலம் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் நியூகேஸ்டில் பல்கலை விஞ்ஞானிகள், இந்திய மரபு வழி மருத்துவ விஞ்ஞானி மனோகர் கார்க் தலைமையில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனோகர் கார்க் கூறுகையில், ' நீரிழிவு நோய்க்கு மூல காரணமாக இருப்பது மண்ணீரலில் ஏற்படக்கூடிய அழற்சியால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவது தான்' என்றார். இயற்கையாக கிடைக்க கூடிய மஞ்சளில் இருக்கும் குர்குமின் வேதிப்பொருளும், ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலமும் ஒரே நேரத்தில் உட்கொள்ளப்படும் போது, மண்ணீரலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளதால், மண்ணீரலில் அழற்சி தடுக்கப்பட்டு நீரிழிவு நோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் இன்றைய நாட்களில், குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இயற்கையான மஞ்சள் கலந்த உணவுகளை உண்ணத் தவறுவதால், அதன் மூலமாக கிடைக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கிடைப்பதில்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மஞ்சளும், ஒமேகா 3 வகை கொழுப்பும் தனித்தனியே உட்கொள்ளப்படும் கிடைக்கும் பலனை விட சேர்த்து உட்கொள்ளப்படும் போது அதிக பலன் கிடைப்பதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-201515:15:47 IST Report Abuse
Sundeli Siththar நமது உணவு தயாரிப்பில் குழம்பு, ரசம் மற்றும் காய்கள் வேகவைக்கும்போதும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்வோம்.... அதற்கு காரணம், அது ஒரு கிருமிநாசினி என்பதால். மஞ்சளை பெண்கள் முகத்திலும் உடலிலும் பூச செய்வது அவர்களை வெப்பம் போன்றவற்றில் இருந்து காக்கவும், முகம் பளபளப்பாக இருக்கவும் உதவும். இவை அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய பல அதிமேதாவிகள், மஞ்சளை ஒரு சில பேஸ் கிரீம்களில் கலந்து விற்பனை செய்தால் அதை வரிசையில் நின்று வாங்குகின்றனர். இயற்கை உணவுமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் கூச்சப்படாமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச முதியோர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு பயன்படுத்துவோம் .
Rate this:
Cancel
sp kumar - Chennai,இந்தியா
19-ஜூலை-201507:17:35 IST Report Abuse
sp kumar மஞ்சள் காமாலையா ? சிறு பாகல் காய்களை ஜூஸ் ஆக்கி காலையில் 3 நாட்கள் குடியுங்கள் . பீச்சி அடிக்கும் ( லூஸ் motion ) பின்பு கண் மஞ்சள் போய் வெள்ளை ஆகும். தயிர் சாதம். லிவ் 52 என்ற கீழா நெல்லி மாத்திரைகளோ எடுத்துக்கொள்ளுங்கள் .. எந்த கொம்பனும் உலகில் மஞ்ச காமாலைக்கு மருந்து சொல்லவில்லை . லிவ் 52 ஆங்கில வைத்தியன் சிபாரிசு செய்யும் நம் நாட்டு மூலிகை மருந்து . வயிற்றுக்கு ஓய்வு தேவை .ஜே ஜே என்று டாஸ்மாக் போவர்களுக்கு எந்த மருந்தும் வேலை செய்யாது .
Rate this:
Cancel
sp kumar - Chennai,இந்தியா
19-ஜூலை-201507:10:24 IST Report Abuse
sp kumar சில வற்றை ஆராய்ந்து பின்னரே முடிவுக்கு வருகிறார்கள். மீன் சாப்பிடும் சிலருக்கு தொழில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மிளகாய்க்கு பதில் மிளகு பயன்படுத்தலாம் ( காரத்திற்கு ) உப்பு அளவோடுதான் இருக்க வேண்டும். கசப்பு நாம் எடுத்துக் கொள்வதாய் இல்லை. நம் உணவு முறையில் சீரகம், மஞ்சள், மிளகு, தனியா,பூண்டு, வெங்காயம், வெந்தயம், கீரை வகைகள் பெருங்காயம், கடுகு அனைத்தும் மருத்துவப் பயன்களையும் மனதில் வைத்தே சேர்க்கப்பட்டுள்ளன. கருவேப்பிலையில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க ஆறவைத்த எண்ணையை தடவி வாருங்கள் முடி நரைக்காது, சீக்கிரம் விழாது. கருவேப்பிலை கொத்து மல்லி தொகையல் மருந்துணவு வகைகள் தாம் .ரோஜா இதழ்கள் ( 5 பூவினது ) ஒரு 100 மில்லி நீரில் காய்ச்சி 50 மில்லி ஆகி குடித்து வர ரத்த கொதிப்பு நிற்கும் .இஞ்சி , எலுமிச்சை சிடர் ஆப்பிள் வினிகருடன் கொதிக்க வைத்த சாற்றில் ஆரிய பின் தானே கூடி தினமும் அருந்திவர ரத்த குழை அடைப்பு நீங்கப் பெரும் . செய்து பார்த்தவர் தன அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X