கொடைக்கானல்:கொடைக்கானலில் பெண்ணை எரித்ததாக கைதானவர்களின் வீட்டை, பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமம் கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி வீரலட்சுமி 41, கடந்த ஜூலை 17 ல் வீட்டில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் வீரலட்சுமியின் கணவர் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அதே ஊரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் 31, ஜெயக்குமார் 35 , ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நகை, பணத்திற்காக வீரலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது.
ஜெயப்பிரகாஷின் தந்தை தங்கராஜ், அங்குள்ள ஒரு தேவாலயத்தின் போதகர். இவர்களின் வீடு ராஜபுரம் பகுதியில் உள்ளது. உள்ளூர் நபர்கள், நல்லவர்கள் போல பழகி வீரலட்சுமியை கொலை செய்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரின் வீட்டையும், உறவினர்கள் வீட்டையும் , தேவாலயத்தில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
கவுஞ்சி பொதுமக்கள், "கொலைக்கான காரணம் குடிபோதையே' என்று தெரிவித்துள்ளனர். கிராமத்தில் அனுமதியின்றி மறைமுகமாக விற்கப்படும் மதுபானங்களை தடுக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேவாலயம் தாக்கப்பட்டதால் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE