கவனம் பெறுமா பாலின விகிதம்? பெ.சுப்ரமணியன் -எழுத்தாளர், சிந்தனையாளர்

Added : ஜூலை 25, 2015 | கருத்துகள் (4) | |
Advertisement
அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கீ பாத்' எனும் வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது, நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகள் விகிதம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வந்த இவ்விஷயம்,
கவனம் பெறுமா பாலின விகிதம்? பெ.சுப்ரமணியன் -எழுத்தாளர், சிந்தனையாளர்

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கீ பாத்' எனும் வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது, நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகள் விகிதம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வந்த இவ்விஷயம், தற்போது ஆட்சியாளர்களாலும் பேசப்படுகிறது எனில், அதன் தீவிரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் வெளியாகும்போது, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது எதிர்கால சமூகத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பக்கூடும் என, சமூகத்தின் மீது அக்கறை கொண்டோரும், சமூக ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பெயரளவிலான திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; அதனால் எவ்வித பலனும் இல்லை.பொதுவாகவே, பெண் குழந்தை என்றால், அழகு, நல்ல அதிர்ஷ்டம் என்பது தான் நம் மரபாக இருந்து வந்தது. ஆனால், கடந்த, 50 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. இன்று பெண் குழந்தைகள் செலவினமாகவும், ஆண் குழந்தைகள் கவுரவத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.மக்கள் தொகை கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போதே துவங்கியது என்றாலும், அப்போது மக்கள் தொகையும், எழுத்தறிவு விகிதமும் குறைவாக இருந்ததால் பெண் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்கள், மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நாளடைவில் மக்கள் தொகை, எழுத்தறிவு விகிதம் போன்றவை அதிகரித்ததைத் தொடர்ந்து, கணக்கெடுப்பின் பல்வேறு அம்சங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியது.

கடந்த, 1951 முதல், 2011 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புகளில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், மக்கள் தொகை அடர்த்தி, எழுத்தறிவு விகிதம், நகரங்களின் எண்ணிக்கை, இளையோரின் எண்ணிக்கை போன்றவை அதிகரித்தே வந்துள்ளது; ஆண் - பெண் விகிதமும் அதிகரித்துள்ளது. ஆனால், 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த, 1961ல், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 976 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, அதற்கடுத்து நடந்த ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் குறைந்து கொண்டே வந்துள்ளது. 2001ல், 927 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, 2011ல், 914 ஆகக் குறைந்துள்ளது.கடந்த பல ?? ஆண்டுகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தான், 6 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை, முந்தைய கணக்கெடுப்பை விட, குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2001ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 16.4 கோடியாக இருந்தது. இது, 2011ல், 50 லட்சம் குறைந்து, 15.9 கோடியா உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த மக்கள் தொகையில், குழந்தைகளின் எண்ணிக்கை, 16 சதவீதத்திலிருந்து, 13.1 சதவீதமாகக் குறைந்து விட்டது.ஆண் குழந்தைகள் மீதான மோகம் ஆண்டாண்டு காலமாக இருந்தபோதும், அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதற்கு, மக்களிடையே மாறிவரும் மனோபாவம், அதிகரித்து வரும் மருத்துவ வசதிகள் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறலாம். ஆண் குழந்தைகள் மீதான மோகத்திற்கும், பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுவதற்கும் எழுத்தறிவு குறைவாக இருப்பதே காரணம் என்பது பொதுவான குற்றச்சாட்டு.
ஆனால், எழுத்தறிவு விகிதம் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிகரித்துள்ள வேளையிலும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மோசமான அளவில் குறைந்து வருவது தான் ஆச்சரியமானது. பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவுக்கு எழுத்தறிவின்மை மட்டுமே காரணமல்ல என்பது தெரிகிறது.கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் பாலின சோதனையை தடை செய்யும் வகையில், 1994ல், குழந்தை பரிசோதனை தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், சட்டவிரோதமான கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது. ஆண் - பெண் விகிதத்தில் அதீத மாற்றம் நிகழ்வதற்கு, சட்ட விரோதமான இத்தகைய செயலே முக்கிய காரணம்.

பாலினத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் கல்வியறிவு குறைந்த, கல்வியறிவு அல்லாதோர் மத்தியில் அதிகம் இருப்பதாக கூறுவதுண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. கல்வியறிவு அல்லாதோரும், கிராமங்களில் வசிப்போரும் எந்த குழந்தையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் பெரும்பாலும் உள்ளனர். இன்றளவும் அடிப்படை வசதிகளைப் பெறாத கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்கள், இத்தகைய சோதனையில் ஈடுபடாமல், ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், நகரங்களில் வசிப்போர், எழுத்தறிவு பெற்றவர்கள் ஏதேனும் ஒரு வழியில் பாலினத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு சதவீதம் அதிகரித்துள்ள மாநிலங்களில், குறிப்பாக தமிழகம், ம.பி., - உ.பி., போன்ற மாநிலங்களில் முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கவலை தெரிவித்துள்ளது போன்றே, அரியானா மாநிலத்தில், 2001 - 11 இடையிலான காலகட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம், 850க்கும் கீழ் (1,000 ஆண் குழந்தைகளுக்கு) குறைந்துள்ளது. கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைக்கு தடை விதிக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலான போதும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை தரும் விஷயம். என்ன தான் சட்டம் இயற்றியபோதும் அது ஓரளவே பயன் தரும் என்பதையும், தண்டனை பற்றிய அச்சம் மட்டுமே தவறுகளை தடுப்பதற்கான கருவியாக இருக்காது என்பதையும் தான் இது காட்டுகிறது.அதனால், பெண் குழந்தைகளை குறைத்து மதிப்பிடச் செய்யும் சமூக, காலசார காரணிகளை புரிந்து கொண்டு, அவற்றை அகற்றும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கருவில் இருப்பது பெண் குழந்தை என்றபோதும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே உருவாக்க வேண்டும். இதற்கான பணிகளில் சுகாதார த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகள் குக்கிராமங்களில் துவங்கி பெருநகரங்கள் வரையில் அனைவரையும் சென்றடைய வேண்டும். அப்போது தான் எதிர்வரும் காலங்களில் ஆண் - பெண் குழந்தைகளின் எண்ணிக்கை சமநிலையை எட்டும். இதற்கான சரியான திட்டமிடலும், வழிகாட்டலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் தான் உள்ளது.
இ-மெயில்: psmanian71@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (4)

Latha - Coimbatore,இந்தியா
05-ஆக-201511:25:42 IST Report Abuse
Latha சமுகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.தவிர வரதட்சணை கொடுமை . ஆண்களிடம் அடிமை ஆகும் சூழல்.- இவையே இதற்கு காரணம்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
27-ஜூலை-201509:58:17 IST Report Abuse
spr For a mammal to be considered a female, the individual must receive an X chromosome from both parents, whereas to be considered a male, the individual must receive a X chromosome from their mother and a Y chromosome from their father. It is thus the male's sperm that determines the sex of each offspring in humans. There is about a 51 percent chance of producing a male offspring and 49 percent a female,(Fisher's principle determining this sex ratio).இந்த வகையில்,ஆண்களிடமிருந்து வரும் X க்ரோமோசோம் குறைவுக்குக் காரணம் என்னவென்று அறியப்படவேண்டும் இக்கருத்துப்படி இயற்கையே குறைவான பெண்கள் பிறக்கக் காரணமாகிறது இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் இதற்கான காரணம் அறியப்படலாம் மேலும் ஒவ்வொரு குடும்பமும் ஒரே குழந்தை என்ற கருத்தில் குடும்பக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளுவதால், அடுத்து வரக்கூடிய பெண் குழந்தை பிறப்பது பல இந்தியக் குடும்பங்களில், தவிர்க்கப்படுகிறது ஆனால் பல குடும்பங்களில் குழந்தையே பிறப்பதில்லை என்பதே உண்மை அதுவே செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகரிக்கக் காரணம் முடிந்தவரை அவர்கள் ஆண் குழந்தைகளையே பிறக்க வைக்க முயற்சிக்கிறார்களோ
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
27-ஜூலை-201506:00:40 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பல பிள்ளைய பெத்தவா அதிகம் பெண்குழந்தைகள் பிறந்த வூட்டுலெ பெண் எடுக்கவே தயங்குராக காரணம் என்ன , சின்னகுழந்தைமுதல் பிராணன் போரநிலைலே இருக்கும் கிழவி வரை கற்பழிக்க அலையுரானுகள்ளே எதனால் ? பெண் என்பாளே போகத்துக்குதான் அலையும் நாய்கள் உள்ளவரை பென்குழந்தைகல் பெத்துக்க பயப்படும் நிலைலே இருக்கிரநாடு நம்மனாடுதான் , நல்லகுணம் இருந்தாலும் நல்லவனா இருந்தாலும் அதிகம்படிக்கமுடியாத வாலிபனுக்கு 40வயதானாலும் பெண் கொடுக்க யோசிக்கிறாங்களே பெண்களைபெத்த பெற்றோர்கள் (அதுவும் அவ வேலைக்கிபோயி சம்பாதித்தால் அவ்ளோதான் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X