பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி.,யின் கடைசி மகன் வாலேஸ்வரன் உடல் தகனம்

Added : ஜூலை 26, 2015
Share
Advertisement
சென்னை:உடல்நலக் குறைவால் காலமான, வ.உ.சி.,யின் கடைசி மகன், வாலேஸ்வரன் உடலுக்கு, அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சலி செலுத்தினர். இந்திய விடுதலைக்கு பாடுபட்ட, சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின் கடைசி மகன் வாலேஸ்வரன், 88. சில மாதங்களாக, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலேஸ்வரன், மடிப்பாக்கத்தில், அவரது இரண்டாவது மகன் செல்வராமன் வீட்டில் தங்கி

சென்னை:உடல்நலக் குறைவால் காலமான, வ.உ.சி.,யின் கடைசி மகன், வாலேஸ்வரன் உடலுக்கு, அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய விடுதலைக்கு பாடுபட்ட, சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின் கடைசி மகன் வாலேஸ்வரன், 88. சில மாதங்களாக, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலேஸ்வரன், மடிப்பாக்கத்தில், அவரது இரண்டாவது மகன் செல்வராமன் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம், அவர் உயிரிழந்தார். அவரது, இறுதி சடங்கு, நேற்று மாலை, 3.00 மணிக்கு, பெசன்ட்நகர் மின்மயானத் தில் நடைபெற்றது.முன்னதாக, செல்வராமன் வீட்டில் வைத்திருந்த வாலேஸ்வரன் உடலுக்கு, மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மேயர் சுப்ரமணியன், ஏ.சி.சண்முகம், வ.உ.சி. பேரவை நிர்வாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X