ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்: முதல்வர் பதவிக்கு ஆபத்து இல்லை

Updated : ஜூலை 27, 2015 | Added : ஜூலை 27, 2015 | கருத்துகள் (80)
Advertisement
SC, jayalalitha, சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதா

புதுடில்லி : சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ., உள்ளிட்ட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குமாரசாமி தீர்ப்புக்கு தடை விதிக்கப்படாததால், ஜெ.,யின் முதல்வர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு கோர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ஜெ., உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து மே மாதம் தீர்ப்பளித்தார். இதனையடுத்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். இந்நிலையில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், சொத்து மதிப்பு கணக்கீடுகளில் பல குளறுபடிகள் இருப்பதாக கூறிய கர்நாடக அரசு, தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. திமுக.,வும் தனது பங்கிற்கு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு அளித்தார்.
ஜெ.,க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் சிறப்பு பெஞ்ச் முன் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கர்நாடகா மற்றும் திமுக தரப்பு மனுக்களை விசாரணைக்கு ஏற்றதுடன், ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணை 8 வாரங்களுக்கு பிறகு நடைபெறும் எனக்கூறி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு ஏற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Indran - Pudukottai,இந்தியா
28-ஜூலை-201507:27:29 IST Report Abuse
T.Indran கோர்ட்டில் இப்படி கூட வாதங்கள் நடைபெறலாம். நீதிபதி: திமுகவினர் ஏன் இந்த சொத்து குவிப்பு வழக்கில் வக்காலத்து வாங்குகிறீர்கள். அன்பழகன்: ஐயா எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று ஒரு காலத்தில் கூவியவர்கள் தான் நாங்கள், அது ஒரு காலம். ஆனால் இப்போது தேர்தலில் மக்கள் எங்களை தொடர்ந்து ஒதுக்கி விட்டதால், கூனி குறுகி கூன் பாண்டியன் போல் எங்கள் திமுக உள்ளது. எங்கள் கட்சியின் மறு வாழ்வு என்பது இந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் தான் உள்ளது. ஜெயா அவர்கள் தண்டிக்க பட்டு முதல்வர் பதவியை இழந்தால் தான், நாங்களும் எங்கள் கட்சியும் பிழைக்க முடியும். தயவு செய்து குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்யுங்கள். இல்லை என்றால் எங்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் விவசாயிகளை போல தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. எங்கள் மீது இரக்க பட்டு கருணை காட்டுங்கள் ஐயா. நீதிபதி: இந்த வழக்கு உங்களால் ஜோடிக்கபட்ட வழக்கு என்று உறுதியா தெரிகிறது. ஆகவே தீர்ப்பு உங்களுக்கு ஏமாற்றத்தை தர வாய்ப்பு உள்ளது. அதற்காக தற்கொலையில் ஈடுபடாதீர்கள். கட்சி நடத்தி தான் பிழைக்க வேண்டும் என்பதில்லை. பணக்கார நாடுகளுக்கு குடியேறி பிச்சை எடுத்து பிழைக்கலாம். உங்கள் கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலும் 60 வயதை தாண்டி உள்ளீர்கள். பிச்சை எடுக்கும் தொழில் செய்தால் நல்ல வெற்றியை கொடுக்கும். நீங்கள் சீக்கிரம் கடையை மூடிக்கொண்டு இடத்தை காலி செய்வது தான் தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் உதவி. தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Lakshman - Bangalore,இந்தியா
28-ஜூலை-201507:21:15 IST Report Abuse
Lakshman நன்றாக நினைவில் உள்ளது இந்த தானை தலைவர் நான் 7 வது படித்துகொண்டு இருகும் போது ஓட்டு பிச்சை கேக்க வந்தார் ...என்னை 13 ஆண்டுகள் வனவாசம் செய்ய வைத்தீர்கள்...இந்த தடவை மட்டும் என்னை தேர்ந்து எடுங்கள் முதலமைச்சராக .......உங்கள் M.G.R. ( அப்பொழுது புருக்ளின் மருதுவமனையீல் இருந்தார் )திரும்பி வந்தவுடன் நான் இந்த பதவியை திருப்பி அவரிடம் கொடுத்து விடுகிறான் .....ஆனால் அன்றும் இன்றும் மக்கள் நிராகரித்துகொண்டுதான் இருக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஜூலை-201503:25:06 IST Report Abuse
D.Ambujavalli இந்த எட்டு வாரத்துக்குள் எட்டு அமைச்சர்களையாவது தூக்கி, மாற்றி செஸ் , பரமபதமெல்லாம் விளையாட வேண்டும். எப்படியும் கேஸ் முடிய 2080 ஆகும். நம்ம கொள்ளு, எள்ளுப் பேரன்கள் தீர்ப்பைப் படிக்கப் போகிறார்கள் நாம் 'அங்கிருந்தே' ரசிக்கத்தான் முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X