நான் நிம்மிஜான்

Added : ஜூலை 31, 2015 | கருத்துகள் (7)
Share
Advertisement
நான் நிம்மிஜான்...சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது மனதிலும் ஆறாத ரணத்தையும், மீளாத்துயரத்தையும் ஏற்படுத்திய மரணம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமினுடையது.அவரது உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்காக கடந்த 29ந்தேதி ராமேசுவரத்திற்கு பத்திரிகையாளர்களும் போலீசாரும் போய்ச்சேர்வதற்குள் அவர் மீது பாசம் கொண்ட பொதுமக்கள் குவிந்துவிட்டனர்.பொது
நான் நிம்மிஜான்


நான் நிம்மிஜான்...
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது மனதிலும் ஆறாத ரணத்தையும், மீளாத்துயரத்தையும் ஏற்படுத்திய மரணம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமினுடையது.

அவரது உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்காக கடந்த 29ந்தேதி ராமேசுவரத்திற்கு பத்திரிகையாளர்களும் போலீசாரும் போய்ச்சேர்வதற்குள் அவர் மீது பாசம் கொண்ட பொதுமக்கள் குவிந்துவிட்டனர்.

பொது அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை சுற்றி கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பாலைவனம் போல மணல்திட்டுதான்.

அதிகாலை சூரிய வெப்பத்திற்கே தகிக்கதுவங்கிய மணலில் காலை 7 மணிக்கு முதல் ஆளாக வந்தமர்ந்தவர்தான் நிம்மிஜான்.

இதோ அவரே இனி பேசுகிறார்

நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்வள் அங்கன்வாடி பணியாளராக இருந்து ஒய்வு பெற்றுவிட்டேன் இப்ப அறுபது வயதாகிறது எனக்கு கலாம் ஐயான்னா ரொம்ப பிடிக்கும் பத்திரிகைகளில் வரும் அவரது பேச்சையும் அவர் பள்ளிக்கூடத்து பிள்ளைகளிடம் கேள்வி பதில் முறையில் பேசுவைதையும் பார்த்து பார்த்து அவர் மீது அலாதியான பிரியம் உண்டாகிவிட்டது.

அவர் சம்பந்தபட்ட எந்த செய்தி எது வந்தாலும் உடனே எல்லோருக்கும் படிச்சு காட்டிருவேன்,அவர் பெரிய பெரிய பதவியில் இருந்து ஒய்வு பெற்ற போதும் பணிக்குதான் ஒய்வு என் செயலுக்கு தொண்டுக்கு ஒய்வு இல்லை என்று சொல்லி ஒடி ஒடி உழைத்த அவரைப்பார்த்து நித்தமும் பெருமைப்படுவேன்.

அவர் எண்பது வயதை தாண்டியும் இப்படி ஊருக்காக உழைக்கிறாரே நமக்கு அறுபது வயதுதானே ஆகுது என்னா ஒய்வு வேண்டிக்கிடக்கு என்று நினைத்து நான் பணியாற்றிய அங்கண்வாடி உள்ளீட்ட குழந்தைகள் மையத்திற்கு சென்று கலாம் ஐயாவின் ஓழுக்கம் எளிமை உண்மை நேர்மை போன்றவைகளை சொல்லிக்கொடுத்து வர்ரேன்.அவரது கதையை குழந்தைகள் ரொம்ப ஆர்வமாக கேட்பார்கள்.

நான் செய்யும் இந்த சின்ன சேவையானது அவரது சேவைக்கு முன்னால் துாசுதான் இருந்தாலும் ஐயா நான் இப்படி உங்களைப்பத்தி உங்களுக்கு பிடிச்ச குழந்தைகள்ட்ட சொல்லிட்டு வர்ரேன் என்று ஒரு முறை நேரில் பார்த்து சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தை பெறவேண்டும் என்று நினைத்தேன்,ஆனால் அது கடைசி வரை முடியாமப்போச்சு..(மேற்கொண்டு பேசமுடியாமல் நாதழுதழுக்க குரல் கம்ம அழுகிறார்,பிறகு சிறிது நேரம் கழித்து கண்ணை துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்கிறார்.)

திடீர்னு அவருடைய மரணச் செய்தி கேட்டதும் என்னால தாங்கவே முடியலை அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர ரொம்ப நேரமாயிருச்சு அவருடைய உடலை ராமேசுவரம் கொண்டு வர்றேங்கன்னு தெரிஞ்சதும் உடனே கிளம்பிட்டேன்.

என்னைப்போலவே என் எட்டாவது படிக்கும் பேத்தி உமேராவிற்கும் கலாம் ஐயான்னா ரொம்ப உசிரு ஆனால் அவளைக்கூட்டிட்டு வர்ர அளவிற்கு பொருளாதாரம் இல்லை ஆகவே இருடி ராசாத்தி என்று கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி அவளை வீட்டில் விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டேன்.

இங்கே உள்ளவங்களுக்கு என்ன செய்யுறது எது செய்யுறதுன்னு தெரியல அதுனால நானே முதல் ஆளா சுடுமணல்ல கிழே உட்கார்ந்து வரிசையை ஆரம்பிச்சுவச்சேன், எட்டு மணி நேரமாயிருச்சு இன்னும் ஐயா உடம்பு வரலை எட்டு நாளானாலும் இருந்து பார்த்துட்டுதான் போவேன்


பசி தாகம் எதுவும் தெரியலை அவர் முன்னாடி நிற்கிற அந்த ஒரு வினாடி, ஐயா நான் உங்கள் புகழ்பாடும் நிம்மிஜான் வந்துருக்கேன், உங்க புகழை முன்னைவிட வேகமா முன்னைவிட அழுத்தமா முன்னைவிட அதிகமா நான் குழந்தைகளிடம் கொண்டு போய்ச்சேர்ப்பேன், அதற்கு ஆசீர்வாதம் தாங்கய்யான்னு மானசீகமா கேட்டுக்கபோறேன் என்றவர் குரல் மீண்டும் கம்மவே நேர்காணலுக்கு நிறைவு செய்தேன்.

(பின்னர் அவரிடம் போனில் பேசிய போது கலாமின் முகத்தை பார்த்த அந்த தருணம் வாழ்வில் மறக்கமுடியாதது என்றவர் யாராவது அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் போன்ற மலிவு பதிப்பு புத்தகங்களை எனக்கு வாங்கித்தந்தால் நான் அதனை குழந்தைகளிடம் கொண்டு போய்ச்சேர்ப்பேன் என்ற கோரிக்கையையும் வைத்தார், என் பங்கிற்கு நான் வாங்கி அனுப்ப உள்ளேன் உங்களில் யாரேனும் அவரது கோரிக்கையை ஏற்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9894081227.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
07-ஆக-201509:10:43 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே "வேகமா முன்னைவிட அழுத்தமா, முன்னைவிட அதிகமா, நான் குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்ப்பேன், அதற்கு ஆசீர்வாதம் தாங்கய்யான்னு" அம்மா தாயே, இளைஞர்/இளைஞிகளுக்கு தான் கலாம் ஐயாவின் மீது மரியாதை, சில/பல வயோதிக எட்டப்பர்களுக்கு மரியாதையே இல்லை என்று நினைத்திருந்தேன், உங்களின் வார்த்தைகளில் மனம் கசிந்தேன். உங்கள் கால்களில் வீழ்ந்து வணங்குகிறேன். கலாம் ஐயாவின் ஆசையே இந்திய வல்லரசாக வேண்டுமென்பது தான். அந்த ஆசைக்கு வயதேது.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-ஆக-201513:38:55 IST Report Abuse
Cheran Perumal இரண்டுநாளும் எதுவும் செய்யத்தோன்றாமல் டி வீ பெட்டிமுன்பு அமர்ந்து அந்த அஞ்சலி நிகழ்ச்சிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனவலிமை இழந்ததால் உடலுக்கும் தென்பில்லை ராமேஸ்வரம் போய்வர. காந்தி உட்பட வேறு எந்த மனிதருக்கும் இத்தகைய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
Rate this:
Cancel
manikandan chellappa - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201523:31:50 IST Report Abuse
manikandan chellappa எனது குரு கலாம் சார் தான். நான் இப்போ துபாயில் பணி புரிவதால் என்னால் அங்கு வரமுடியாது ...அதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நான் கடந்த 6 நாள்களாக ஒரு நேரம் மட்டும் தான் உணவு உண்டேன் ....எனது மொபைல் சுவிட்ச் ஆப் செய்துள்ளேன் ...FACE புக் போன்ற எந்த சோசியல் நெட் வொர்க் கும் நான் உபயோகிக்கவில்லை இது எனது அஞ்சலி ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X