பொது செய்தி

தமிழ்நாடு

சசிபெருமாள் மரணம் பற்றி நீதி விசாரணை:வைகோ கோரிக்கை

Added : ஜூலை 31, 2015
Share
Advertisement

நாகர்கோவில்: காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடை அகற்றும் போராட்டத்தில் இறந்தது பற்றி நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வைகோ கூறினார்.ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சசிபெருமாள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மதுக்கடைகளால், டாஸ்மாக் கடைகளால் தமிழ் சமுதாயம் நாசப்படுகுழியில் சென்று கொண்டிருப்பதால் தனது உயிரையே பணயம் வைத்து சசிபெருமாள் போராடி வந்தார். 40 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த போது நான் உட்படபலர் வற்புறுத்தி உண்ணாவிரதத்தை கைவிட வைத்தோம். டில்லியில் குளிரில் 40 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மதுஇல்லாத நாடு என்று கோவையில் இருந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்திய போது கொட்டும் மழையில் நானும் அவருடன் கலந்து கொண்டேன். மதுவை ஒழிக்கிறேன் பதவி வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. பெண்களின் கண்ணீருக்கும், சமூக சீரழிவுக்கும் மது காரணம் என்பதால் அதை ஒழிக்க போராடினார்.

டாக்டர் கலாம் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அவரும் கலந்து கொண்டார். அப்போது உண்ணாமலை டாஸ்மாக் கடை பற்றி சொன்னார். இந்த கடையை அகற்ற கோரி அவர் ஏற்கெனவே உண்ணாவிரதம் இருந்த போது ஜெ. அரசு பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர். ஆதனால் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த உச்சிக்கு சென்றுள்ளார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அரசு நினைத்திருந்தால் கடையை மூடுகிறோம் என்று சொல்லியிருக்கலாம். அவர் இறந்தாரா? கொல்லப்பட்டாரா? இந்த மரணத்துக்கு அதிமுக அரசு காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். மதுவை ஒழிக்கும் போராட்டத்தில் உயிரை விடவேண்டும் என்று அவர் கூறியிருந்தார். வருவாய், காவல்துறை அதிகாரிகள் இதற்கு காரணம். இந்த அரசுக்கு மனதாபிமானம் இல்லை. கோடிக்கணக்கான தாய்மார்கள் டாஸ்மாக் கடை மீது கோபத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும். சசிபெருமாளின் உயிர் தியாகத்துக்கு அதுதான் காணிக்கையாக இருக்க முடியும். மூடாவிட்டால் மக்களே மூடவேண்டிய நிலை ஏற்படும். இன்னும் குடிபழக்கத்துக்கு ஆளாகதவர்கள் கிளர்ந்து எழ வேண்டும். சசிபெருமாளின் உயிர்தியாகத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மக்கள் எல்லாம் கிளர்ந்து எழ வேண்டும். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை இனி இருக்க கூடாது. சசிபெருமாள் மரணம் பற்றி நீதிவிசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X