| வருடாந்திர பெண்கள் தின விழா| Dinamalar

வருடாந்திர பெண்கள் தின விழா

Updated : நவ 22, 2010 | Added : நவ 21, 2010 | கருத்துகள் (1)
Advertisement

 

புட்டபர்த்தி: சாய் பாபாவின் 85வது பிறந்த நாளை ஒட்டி வருடாந்திர பெண்கள் தின விழா, குல்வந்த் மண்டபத்தில் 19ம் தேதி பகல் 12 மணி அளவில் துவங்கியது. விழாவுக்கு வந்த சாய் பாபாவை அன்நதப்பூர் பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்திய முழங்க வரவேற்றனர். இந்த விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஆந்திரா கவர்னர் நரசிம்மன், பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல், ஆந்திர அமைச்சர் ஜெ.கீதா ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். விழாவை சாய்பாபா, குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைத்தார். ஈஸ்வரம்மா பெண்கள்நல அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் சேத்தனா ராஜு அறிமுக உரை ஆற்றினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹைமா ரெட்டி நன்றி கூறினார். பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த பால விகாஸ் மாணவ, மாணவியரின் நடனம் இடம் பெற்றது. பெண்கள் தின கேக்கை, சாய் பாபா வெட்டினார். முன்னதாக பகல் 11:40 மணி அளவில் ஜனாதிபதி சிறப்பு விமானத்தில், சத்ய சாய் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரை ஆந்திர கவர்னர் நரசிம்மன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
மாலை நிகழ்ச்சிகளுக்காக குல்வந்த் மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 07:10 மணி அளவில் மண்டபத்திற்கு சாய் பாபா வந்ததும், ஐதராபாத் சத்ய சாய் வித்யா விகார் பள்ளி மாணவர்களின் நடனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுதா ரகுநாதன் கச்சேரி மற்றும் பஜனை நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சாய்பாபா, வேஷ்டி, சேலைகளை வழங்கினார். கூடியிருந்த பக்தர்களுக்கு இத்தாலிய சாக்லேட்டுகளும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


 http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cskumar - Mumbai,இந்தியா
21-நவ-201020:45:03 IST Report Abuse
cskumar OM SRI SAIRAM, Koti Koti Pranams At Your Lotus Feet.Happy Birthday
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X