15 ஆண்டு முதலீட்டில் டாப் 10 பட்டியல் தயாரிப்பு : ஹுண்டாய் நிறுவன பெயர் விடுபட்டதால் குழப்பம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (2)  கருத்தை பதிவு செய்ய

தமிழகத்தில், 15 ஆண்டுகளில், முதலீட்டில், முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியலை, மத்திய அரசு தயாரித்து உள்ளது. அதில், 'ஹுண்டாய் இந்தியா' கார் நிறுவனம் விடுபட்டு இருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எந்தெந்த மாநிலங்களில், அன்னிய நிறுவனங்கள், எந்த அளவுக்கு தொழில் முதலீடு செய்துள்ளன என்ற பட்டியலை, மத்திய அரசு தயாரித்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில், போர்டு நிறுவனம், 15 ஆண்டுகளில், அதிகளவில், 4,110 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடு செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

மிஷலின் குறைவு:

'தமிழகத்தில், 4 ஆயிரம் கோடி ரூபாய், முதலீடு செய்யப்படும்' என்ற உத்தரவாதத்துடன், திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகையில், டயர் உற்பத்தி ஆலையை, 2010-ல் துவங்கிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, மிஷலின் நிறுவனம், எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை, 686 கோடி ரூபாயை மட்டுமே, அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

'ஹுண்டாய்' இல்லையா?

எனினும், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் சார்பில், வெளியாகி உள்ள பட்டியலில், தமிழகத்தில், 'ஹுண்டாய் இந்தியா' கார் நிறுவனத்தின் பெயர் விடுபட்டிருப்பது,

குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழக தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் இதுவரை, ஹுண்டாய் நிறுவனம், மூன்று கட்டமாக, 10 ஆயிரத்து, 400 கோடி முதலீடு செய்து உள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி மூலமாக, மத்திய அரசு தொகுத்து வெளியிட்டுள்ள, அன்னிய முதலீட்டாளர் பட்டியலில், வெற்றிகரமாக இயங்கிவரும், 'ஹுண்டாய்' விடுபட்டு இருப்பது, ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது' என்றனர்.

'டாப் 10' நிறுவனங்கள்பட்டியல்:

நிறுவனம் / முதலீடு (ரூபாய் கோடியில்)
போர்டு / 4,110
ஹாஸ்பைரா எல்த்கேர் / 3,648
டெய்ம்லர் / 3,594
ரெனால்ட் - நிசான் / 3,154
டபிள்யு.எஸ்., எலக்ட்ரிக் / 1,781
எல்.பி., கியூப் சிஸ்டம்/ 1,406
நிசான் / 1,026
மிஷலின்/ 686
ஷெல் காஸ் பி.வி., / 539
சென் கோபைன் / 517

நான்கு ஆண்டுகளில் 70 சதவீதம் அன்னிய முதலீடு அதிகரிப்பு: தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது : தமிழகத்தில், அன்னிய முதலீட்டை பொறுத்தவரை, போர்டு நிறுவனம், தொழில்

Advertisement

துவங்கியதை ஒரு மைல்கல் எனலாம். போர்டு நிறுவனத்தை ஈர்க்க, அப்போது கடும் போட்டி நிலவியது. பெரும் போராட்டத்துக்கு பின், அந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில், தொழிற்சாலையை துவக்கியது.அப்போது, 1,500 கோடி ரூபாயை முதலீடு செய்தது. அந்த நிறுவனம் வந்த போதே, அதற்கான உதிரி பாகங்களை, சப்ளை செய்யும் நான்கு நிறுவனங்கள் வந்தன.அதன்பின், ஹுண்டாய் நிறுவனம், 1995 - -96-ல், 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உடன்பாடு செய்தது. பின்,படிப்படியாக, வேறு பல நிறுவனங்களின், முதலீடுகளும் தொடர்ந்து அதிகரிக்க துவங்கன.குறிப்பாக, 2011 ஏப்ரல் முதல், கடந்த - ஏப்ரல் வரை, நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில், அன்னிய முதலீடு, 70 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009 - -10ல், தமிழகத்துக்கு, மொத்தம், 4,800 கோடி முதலீடு வந்தது. அது, கடந்த நிதியாண்டில், 22,800 கோடியாக அதிகரித்து உள்ளது; இது, 80 சதவீதம் உயர்வு.தமிழகத்தில், முதலீடு குறைந்துவிட்டதாக சிலர் கூறுவது தவறு என்பதை, இதன்மூலம் அறியலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

அன்னிய முதலீடு பட்டியல்:
ஆண்டு / முதலீடு ( ரூபாய் கோடியில்)

2009 - 10/ 4,800
2010 - 11/8,400
2011 - 12/8,400
2012 - 13/16,800
2013- 14/12,600
2014 - -15/22,800

- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga - Chennai,இந்தியா
01-ஆக-201513:26:35 IST Report Abuse
Naga இந்த லிஸ்ட் அந்நிய முதலீடு பற்றியது...ஆனால் ஹுண்டாய்ல் தாத்தாவின் பேரனின் பங்கு அதிகம். அதனால் அது அந்நிய முதலீட்டில் வராது. கொள்ளை செய்த முதலீடு கணக்கெடுத்தால் , அவர் பெயர் கண்டிப்பாகவரும்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-201508:14:22 IST Report Abuse
Kasimani Baskaran MIDAS மூலம் தமிழகத்தை மட்டும் கெடுப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்தால் ஏதாவது லாபம் வரும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X