புட்டபர்த்தி: சாய் பாபாவின் 85வது பிறந்தநாளை ஒட்டி, சதய் சாய் பாபா சர்வதேச மையத்தில் ( உள்ளரங்கு) இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சத்ய சாய் அமைப்புகள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டினருக்கென தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் சாய் பாபா அமைப்புகளின் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. கிராமப்புறச் சிறுவர், சிறுமியருக்கு கற்பித்தல், சுகாதார குறிப்புகள் வழங்குதல், கிராமப்புறங்களுக்கு சேவா தளத் தொண்டர்கள் சென்று விவசாய குறிப்புகள் தருதல், ஆபத்து காலங்களில் உதவுதல், கிராம மக்களிடையே விளையாட்டை ஊக்குவித்தல், முதியோர் மற்றும் தொழுநோய் மையங்களுக்குச் சென்று உதவுதல், போன்ற பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தந்த அரங்குகளில் அவர்களுடைய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE