மண்டல மாநாடு நடக்கப்போகுது கலெக்சனுக்கு கௌம்பிட்டாங்க!

Added : ஆக 04, 2015
Share
Advertisement
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவால் மிகுந்த சோகத்தில் இருந்த சித்ரா, ""அதிகாரிகள், என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்கிறாங்க,'' என, புதிர் போட்டாள்.""எந்த அதிகாரிகள், எதுக்கு தவிக்கிறாங்க'' என, விளக்கமா சொல்லுங்க என கேட்டாள் மித்ரா.""பூரண மது விலக்கு போராட்டம் ரொம்ப தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு; எதிர்க்கட்சிக்காரங்க ஒவ்வொரு விதமா போராட்டம், அறிக்கை
மண்டல மாநாடு நடக்கப்போகுது கலெக்சனுக்கு கௌம்பிட்டாங்க!

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவால் மிகுந்த சோகத்தில் இருந்த சித்ரா, ""அதிகாரிகள், என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்கிறாங்க,'' என, புதிர் போட்டாள்.
""எந்த அதிகாரிகள், எதுக்கு தவிக்கிறாங்க'' என, விளக்கமா சொல்லுங்க என கேட்டாள் மித்ரா.
""பூரண மது விலக்கு போராட்டம் ரொம்ப தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கு; எதிர்க்கட்சிக்காரங்க ஒவ்வொரு விதமா போராட்டம், அறிக்கை விட்டுட்டு இருக்காங்க; திருப்பூருல மாதர் சங்கத்துக்காரங்க மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திட்டு வர்றாங்க; ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு இடத்துல போராட்டம் நடத்துறாங்க'' என்றாள் சித்ரா.
""அதுல என்ன பிரச்னை? அவங்க போராட்டம் நடத்துறாங்க; பேச்சு நடக்குது; சமாதானமாகி கலைஞ்சு போயிடுறாங்க; இதுவரைக்கும் ஒரு கடையை கூட பூட்டலையே,'' என்றாள் மித்ரா.
""இன்னைக்கு பிரச்னை அது அல்ல; அதிகபட்சமா மதுபானம் விக்கிற கடைகளுக்கு முன்னாடி, மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்துறாங்க. கடை வாரியா "சேல்ஸ்' விவரம், இவங்க கைக்கு எப்படி கெடைச்சதுன்னு "டாஸ்மாக்' அதிகாரிகள் குழப்பத்துல இருக்காங்க; போலீஸ் அதிகாரிகளிடம் வெளிப்படையா புலம்பியிருக்காங்க; அதிகாரிகளும், கடையை மாத்த மனசு இல்லாம, பேச்சு நடத்தியே சமாளிச்சிட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்; உண்மையா?'' என, கொக்கி போட்டாள் மித்ரா.
""என்ன?'' என சித்ரா கேட்க, ""மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஒருத்தர், "டிரான்ஸ்பர்' ஆகி போறதுக்கு முன்னாடி, பிரியாணி விருந்து வச்சிருக்காங்க. இதுக்காக, வார்டு கவுன்சிலர், 25 கிலோ சிக்கன் வாங்கிக் கொடுத்திருக்கார். இன்னொரு வி.ஐ.பி., 10 கிலோ மட்டன் கொடுத்திருக்கார். ஓட்டலில் வச்சு, பிரியாணி, சிக்கன்-65, மட்டன் சுக்கானு அசத்திட்டாங்க. செலவெல்லாம் மத்தவங்க தலையில விழுந்திருக்கு. சில கவுன்சிலர்களும் விருந்துல கலந்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""ஒரு அதிகாரி வேறிடத்துக்கு மாறுதலாகிச் செல்லும்போது, பிரிவுபசார விழா நடத்தி, விருந்து உபசாரம் செய்றது வழக்கம்தானே,'' என அசால்ட்டாக சொன்ன சித்ரா, ""ரெண்டு நாளைக்கு முன்னாடி, சிவன் கோவிலுக்கு போயிருந்தேன். ஏகப்பட்ட தில்லுமுல்லு செய்றாங்க,'' என, நொந்து கொண்டாள்.
""அந்த கோவிலில்தானே கும்பாபிஷேக திருப்பணி நடந்துக்கிட்டு இருக்கு,'' என, மித்ரா குறுக்கு கேள்வி கேட்டதும், ""ஆமா, அதை, திருப்பணிக்கமிட்டியினர் கவனிச்சுக்கிறாங்க. நான் சொல்ல வர்றது அர்ச்சனை சீட்டு விவகாரம். அந்த சீட்டுல, ரெண்டு ரூபாய் போட்டிருக்கு. எத்தனை சீட்டு வாங்குனாலும், சில்லரை காசு மீதம் வந்தா, கொடுக்கறதில்லைன்னு புகார் வந்துருக்கு. தரிசனம் முடிச்சிட்டு, திரும்பி போகும்போது, வாங்கிக்கிங்கன்னு சொல்றாங்க. ஆனா, சாக்குபோக்கு சொல்லி, எரிச்சலடைய வைக்கிறாங்க.
ஒரு நாளைக்கு, 500 பேர் அர்ச்சனை சீட்டு வாங்குறாங்கன்னு உத்தேசமா கணக்கு போட்டாலே, ஒரு மாசத்துக்கு எவ்ளோ காசு அமுக்குறாங்கன்னு கணக்கு போட்டா, தலைசுத்துது,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
""தி.மு.க.,காரங்க மண்டல மாநாடு நடத்த போறாங்களாமே,'' என மித்ரா கடைசி மேட்டருக்கு தாவினாள்.
""ஆமாப்பா, பல்லடத்துல, 200 ஏக்கர் இடம் தேர்வு செஞ்சிருக்காங்க. செப்., மாசம் மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்காங்க. 16 மாவட்டத்தை சேர்ந்தவங்க, இங்கு கூடப்போறாங்க. மிக பிரமாண்டமா இருக்கணும்னு மாநாட்டு வேலையில் உள்ளூர் நிர்வாகிகள் "பிஸி'யாகிட்டாங்க. கலெக்சன் வேலையையும் இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""தெருமுனை பிரசாரம் நடத்துனாலே, உண்டியல் குலுக்கறது, அரசியல்வாதிகளோடு பழக்கம்; மாநாடு நடத்தப் போறாங்க; பணம் வசூலிக்காமா இருப்பாங்களா,'' என்றவாறு, இரவு டிபன் தயார் செய்ய துவங்கினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X