பாகிஸ்தானில் பரிதவித்த கீதா இந்தியா திரும்புகிறார்

Added : ஆக 04, 2015 | |
Advertisement
புதுடில்லி: காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதா. 13 ஆண்டுகளுக்கு முன், அவளை, பாகிஸ்தானின் பஞ்சாப் வனத் துறையினர் கண்டெடுத்து, லாகூரில் உள்ள இதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த அமைப்பு, சிறுமியை, கராச்சி கிளைக்கு அனுப்பி, பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத அந்த சிறுமிக்கு அப்போது, 10 வயது. அவளுக்கு கீதா என்று பெயர் சூட்டி வளர்த்து

புதுடில்லி: காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதா. 13 ஆண்டுகளுக்கு முன், அவளை, பாகிஸ்தானின் பஞ்சாப் வனத் துறையினர் கண்டெடுத்து, லாகூரில் உள்ள இதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த அமைப்பு, சிறுமியை, கராச்சி கிளைக்கு அனுப்பி, பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத அந்த சிறுமிக்கு அப்போது, 10 வயது. அவளுக்கு கீதா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளார், கராச்சி கிளையின் அமைப்பாளர் பில்குஸ் இதி. அவளது பெற்றோரை கண்டுபிடிக்கவும் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த சிறுமியை நேரில் சந்திக்கும்படி, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உத்தரவிட்டிருந்தார். இதன்படி அவர் கீதாவை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக சுஷ்மா கூறுகையில், இந்திய தூதர் கீதாவை சந்தித்தார். அப்போது, கீதா இந்தியர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் கீதா இந்தியா அழைத்து வரப்படுவார். கீதாவை பார்த்துக்கொண்ட அமைப்புக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X