பொது செய்தி

தமிழ்நாடு

வாகன விபத்தை தடுக்க புதிய தொழில்நுட்பம்: 8 ம் வகுப்பு மாணவி உருவாக்கம்

Updated : ஆக 07, 2015 | Added : ஆக 06, 2015 | கருத்துகள் (15)
Share
Advertisement
சிவகங்கை: வாகன வேகத்தால் விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த மின்காந்த சக்தி மூலம் 'பிரேக்' பிடிக்கும் தொழில்நுட்பத்தை சிவகங்கை மாணவி எஸ்.லக் ஷனா உருவாக்கியுள்ளார்.சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.லக் ஷனா. இவர் தனது முயற்சியால் அதிகவேகமாக செல்லும் வாகனத்தை மின்காந்த சக்தி மூலம் பிரேக் பிடித்து நிறுத்தும் தொழில்நுட்பத்தை
வாகன விபத்தை தடுக்க புதிய தொழில்நுட்பம்: 8 ம் வகுப்பு  மாணவி உருவாக்கம்

சிவகங்கை: வாகன வேகத்தால் விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த மின்காந்த சக்தி மூலம் 'பிரேக்' பிடிக்கும் தொழில்நுட்பத்தை சிவகங்கை மாணவி எஸ்.லக் ஷனா உருவாக்கியுள்ளார்.

சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.லக் ஷனா. இவர் தனது முயற்சியால் அதிகவேகமாக செல்லும் வாகனத்தை மின்காந்த சக்தி மூலம் பிரேக் பிடித்து நிறுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

மாணவி எஸ்.லக் ஷனா கூறும்போது:நாட்டில் வாகன விபத்துகளால் உயிர்பலி அதிகரிக்கிறது. பிரேக் பிடிக்கும் போது ஏற்படும் உராய்வு மூலம் வாகனம் நிற்க காலதாமதம் ஏற்படும். திடீர் விபத்தை தவிர்க்க இந்த பிரேக்கை காலில் அழுத்த முடியாமல், ஓட்டுனர் பதட்டம் அடைவர்.
இதை தவிர்த்து மின்காந்த சக்தியால் இயங்கும் 'பவர் பிரேக்'ஐ உருவாக்கியுள்ளேன். வாகன 'ஸ்டியரிங்கில்' இதற்கான சுவிட்ச் பொருத்தப்படும். வாகனம் செல்லும் போது 'பிரேக்' போட நினைத்தால் ஸ்டியரிங்கில் உள்ள 'சுவிட்ச்சை' அழுத்தினால், மின்காந்த சக்தி மூலம் மின்சாரம் டயர் பகுதி இரும்பில் பட்டு காந்த சக்தியாக மாறி, பிரேக் பிடிக்கும். கால் இழந்தவர்கள் எளிதாக இந்த வாகனத்தை ஓட்டலாம்.

விபத்து நேரிடும் போது பதட்டத்தில் டிரைவரின் கால்களை விட கை எளிதில் செயல்படும் என்பதால், வாகன 'ஸ்டியரிங்கில்' சுவிட்ச்பொருத்தியுள்ளேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை. தேய்மானம் குறைவு. விபத்து அதிகம் நிகழாது. மின்காந்த துாண்டல் சக்தி மூலம் 'பிரேக்' செயல்படும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவாக இதை சமர்பிக்கிறேன், என்றார். மாணவியை பாராட்ட 98652 46473.
மாணவியை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி நிறுவனர் சியாமளா வெங்கடேசன், தாளாளர் கே.வெங்கடேசன், முதல்வர் மலர்விழி பாராட்டினர்.

அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்க முடியாதவர்களுக்கு, இது போன்ற வசதிகளை செய்து கொடுத்தோம். நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில், இந்த புதிய முறைக்கு வரவேற்பு இருந்தது.-வேலு, ஆட்டு வியாபாரி, சேலம்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Revathi Archana - madurai,இந்தியா
07-ஆக-201513:47:46 IST Report Abuse
Revathi Archana வாழ்த்துக்கள் .நீண்ட ஆயுள் உடன் வாழ்க
Rate this:
Cancel
tamilselvan - chennai,இந்தியா
06-ஆக-201518:05:59 IST Report Abuse
tamilselvan Congratz
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
06-ஆக-201514:30:56 IST Report Abuse
mukundan This technology is already under use for very heavy vehicles likes Train and earth movers. This is not an invention but i would congragulate this student for making it for small vehicles like car. But this kind of braking is very powerfull and will put sudden brakes which will lead to skid in small vehicles like cars. Proper electronic control must be given same like ABS technology.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X