பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ரத்ததான முகாம்

Added : நவ 22, 2010
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவமனை, டி.சி.ஆர்., மருத்துவமனை, "சேலன்ஜ் அக்ரி' இந்தியா நிறுவனம் மற்றும் லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். "சேலன்ஜ் அக்ரி' இந்தியா நிறுவன பணியாளர்கள்  60 பேர் ரத்ததானம் செய்தனர். 500க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றனர். டி.சி.ஆர்., மருத்துவமனையின் சார்பில் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.


ரத்ததானம் செய்தவர்களுக்கு டி.எஸ்.பி., லட்சுமணசாமி சான்றிதழ்களை வழங்கினார். டி.சி.ஆர்., மருத்துவமனை டாக்டர் சவுந்திரராஜன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மாசிலாமணி, நகராட்சி கவுன்சிலர் கடலரசு மூர்த்தி, முதன்மை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் தாரா செல்வராஜ், ஆடிட்டர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X