பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ராணுவத்தினருக்கு எஸ்.ஐ., வேலை கிடையாது

Added : ஆக 16, 2015
Share
Advertisement

சென்னை:'சப் - இன்ஸ்பெக்டர் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இட ஒதுக்கீடுசீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சப் - இன்ஸ்பெக்டர் பணிக்கு, நடத்திய எழுத்துத் தேர்வில், கந்தசாமி மற்றும் நம்பிராஜ் கலந்து கொண்டனர். கந்தசாமிக்கு, 25; நம்பிராஜுக்கு, 32.5 மதிப்பெண்கள் கிடைத்து இருந்தன. இருவரையும் உடற்கூறு தேர்வுக்கு, அழைக்கவில்லை.இருவரும், உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.அதில், 'நாங்கள் இருவரும் முன்னாள் ராணுவத்தினர்; குரூப் - சி பிரிவில் தான், சப் - இன்ஸ்பெக்டர் பணியிடம் வருகிறது. அதில், முன்னாள் ராணுவத்தினருக்கு, 5 சதவீத ஒதுக்கீடு கோர உரிமை இருக்கிறது. எனவே, ஒதுக்கீட்டை பின்பற்ற, உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகினர்.
தர ஊதியம்நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி, சப் - இன்ஸ்பெக்டர் பணிக்கு, தர ஊதியம், 4,800 ரூபாய். அரசுப் பணி விதிமுறைப்படி, தர ஊதியம், 4,400 ரூபாயில் இருந்து, 6,600 ரூபாய்க்கு கீழ் என இருந்தால், அந்தப் பணியிடம், குரூப் - பி பிரிவில் வருகிறது. எனவே, சப் - இன்ஸ்பெக்டர் பணியிடமும், குரூப் - பி பிரிவைச் சேர்ந்தது.தள்ளுபடிமுன்னாள் ராணுவத்தினருக்கு, குரூப் - சி பணியிடங்களில் தான், 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 'சப் - இன்ஸ்பெக்டர் பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு இல்லை' என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி
உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X