புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

Updated : ஆக 19, 2015 | Added : ஆக 19, 2015 | கருத்துகள் (3)
Advertisement

புனே : புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்திற்குள் இன்று(19-08-15) அதிகாலை 1.15 மணிக்கு நுழைந்த போலீசார் 5 மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது கல்லவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
19-ஆக-201510:02:33 IST Report Abuse
Krishnamoorthi A N எந்தக் கட்சியின் தலைமை தான் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது? ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜால்ராக்களுக்கு தானே வாரியத் தலைமை, துறைத்தலைமைப் பதவிகள், ஏன்? எம் எல் ஏ, எம் பி தேர்தலில் போட்டியிட சீட் கூட வழங்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
19-ஆக-201508:05:16 IST Report Abuse
Jaya Prakash கஜேந்திர சவுகான் மகாபாரத் டிவி சீரியலில் அதுவும் 1988 இல் நடித்ததை தவிர உருப்படியாக எதுவும் செய்யவில்லை, அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே மட்ட ரகமான காமத்தை தூண்டும் பிட் படங்கள். இவர் பிஜேபி யில் உறுப்பினர் என்ற தகுதியை தவிர இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்திற்கு தலைவர் ஆக வேறு தகுதி இருப்பதாக தெரியவில்லை. மாணவர்களின் போராட்டத்தில் நியாயம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-ஆக-201506:37:00 IST Report Abuse
K.Sugavanam பிஜேபி அரசின் அராஜகம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X