சாய்பாபா பிறந்தநாள்: தங்கரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி

Added : நவ 23, 2010
Advertisement
சாய்பாபா பிறந்தநாள்: தங்கரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி

புட்டபர்த்தி: உலகில் உள்ளது ஒரே மதம்; அதுதான் அன்பு. உலகில் உள்ளது ஒரே ஜாதி; அதுதான் மனித ஜாதி. உலகில் உள்ளது ஒரே மொழி; அதுதான் இதய மொழி என்று உலகிற்கு எடுத்துக் கூறிய சத்ய சாய் பாபாவின் 85வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் தங்கரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசிவழங்கினார்.
சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடந்தது. விழாவுக்கு மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தலைமை வகித்து பேசியதாவது: இறைப்பணி, கல்வி, சுகாதாரம், மனிதநேயம், சமுதாய மாற்றத்தில் சாய்பாபாவின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமங்களில் குடிநீர் வழங்கும் பெரிய பணியில் பாபா ஈடுபட்டிருப்பது வரவேற்க்கத்தக்கதாகும். ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னைக்கும் குடிநீர் வழங்கியும், பெங்களூருவுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் மருத்துவமனையும், கல்வி சேவையிலும் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சாய்பாபா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தமிழகத்தில் சுனாமி, குஜராத்தில் பூகம்பம், ஓரிசாவில் வெள்ளப்பாதிப்பு உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இதனால் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவாதும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு உள்ளனர். இதன் மூலம் நம் நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஆன்மிகத்தை கொண்டு சென்றுள்ளார். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். தற்போது நடக்கும் பிறந்த நாள் விழாவில் ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய ஆசியா நாடுகள், இலங்கை, வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார்.
முன்னாதாக பிரசாந்திநிலையத்திலிருந்து விழா நடக்கும் ஹில் வியூ ஸ்டேடியத்துக்கு தங்கரதத்தில் சாய்பாபா ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சாய்பாபாவின் கல்வி பணியை மேலும் மேம்படுத்தும் வகையில் டாடா குழுமத்தலைவர் ரத்தன் டாட்டா புதிய சாப்ட்வேர் கருவியை சாய்பாபாவிடம் வழங்கினார். விழாவில் ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், முதல்வர் ரோசய்யா, தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் கவர்னர் சிவராஜ்பாட்டீல் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X