உலக சுற்றுலா தலங்களில் கம்போடிய இந்து கோயிலுக்கு முதல் இடம்

Updated : ஆக 22, 2015 | Added : ஆக 22, 2015 | கருத்துகள் (27)
Advertisement
இந்து கோயில்களுக்கு முதல் இடம்

நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா வாசிகள் விரும்பிச் செல்லும் சுற்றுலா தலங்களில், கம்போடியாவில் உள்ள ஆங்கோர் இந்து கோயில்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

உலக அளவில் சுற்றுலாவாசிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களை அமெரிக்காவில் உள்ள லோன்லி பிளேனட் என்ற அமைப்பு வரிசைப்படுத்தி உள்ளது. இதில் கம்போடியாவில் "பூமியில் உள்ள இந்து சொர்க்கம்" என அழைக்கப்படும் ஆ.ங்கோர் இந்து கோயில்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கு கம்போடியாவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், கருவறைகள், கோபுரங்கள் இந்த உச்சத்தைப் பெற்றுத் தந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய விஷ்ணு கோயில் இங்கு உள்ளது. பர்மா, .லாவோஸ் மற்றம் தெற்கு சீனாவிலும் இந்து சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. ஆங்கோரில் உள்ள இந்த கோயில்களின் தூண்களிலும், தரையிலிருந்து கூரை வரையும், ராமாயணம், மகாபாரத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

ஆங்கோர் இந்து கோயில்களை அடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப் பாறைகள் இரண்டாம் இடத்தையும், பெரு நாட்டில் உள்ள பழமையான கூரான மலைச் சிகரம் மூன்றாவது இடத்தையும், சீனப் பெருஞ்சுவர் நான்காம் இடத்தையும், இந்தியாவின் தாஜ்மகால் ஐந்தாம் இடத்தையும், அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் உள்ள உலகப் பாரம்பரிய தேசிய பூங்கா ஆறாம் இடத்தையும், இத்தாலியில் உள்ள பழமையான விளையாட்டரங்கம் ஏழாம் இடத்தையும், பிரேசில்- அர்ஜென்டினா எல்லையில் உள்ள இகுவாஜு நீர்வீழ்ச்சி எட்டாம் இடத்தையும், ஸ்பெயினில் உள்ள ஆலம்பரா கோட்டை மாளிகை ஒன்பதாம் இடத்தையும், துருக்கியில் உள்ள ஆயா ஷோபியா என்ற அருங்காட்சியகம் ( இது முதலில் தேவாலயமாக இருந்து, பின்னர் மசூதியாக மாற்றப்பட்டு, தற்போது அருங்காட்சியகமாக உள்ளது) பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
23-ஆக-201508:58:45 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் தமிழனுக்கு பெருமை என்றவுடன், வடக்கு இந்தியர்கள் வயிறு எரிவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
23-ஆக-201508:58:03 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் ஹாலிவுட் படம் அங்கு எடுக்கப்பட்டது...அதுக்குப் பிறகே அது பிரபலம் ஆனது......சோழர்கள் கட்டியது.....தமிழனின் பெருமை....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
23-ஆக-201506:23:00 IST Report Abuse
மதுரை விருமாண்டி திராவிட மதம் ஊசிமணியோட குயுக்தி, ஊதுபத்தி எல்லாம்..
Rate this:
Share this comment
Muthusamy Vellaisamy - New York,யூ.எஸ்.ஏ
23-ஆக-201507:10:04 IST Report Abuse
Muthusamy Vellaisamyஆங்கிலயர்கள் கொண்டு வந்த ஆர்ய திராவிட பாகுபாட்டை இன்னும் பிடித்து கொண்டு , தமிழர்களின் பெருமைகளை மறுத்து வருகிறோம். தமிழ் இலக்கியங்களில் இந்த பாகுபாட்டை நாம் காண முடிவதில்லை. தமிழனின் மதம் இந்து மதமே. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-201507:16:21 IST Report Abuse
Kasimani Baskaranஉண்மையை மறைப்பது அமெரிக்க உத்தி - அது போல இல்லை... தவறுக்கு மன்னிக்கவும்... ஆனால் அப்பொழுதெல்லாம் திராவிட மதம் தோற்றுவிக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்... தமிழை சோழமன்னர்கள் பரப்புவதில் தீவிரம் காட்டவில்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X