மாணவர்களின் அறிவை வளர்க்க அனிமேஷன்: அசத்துகிறார் ஆசிரியர்

Added : ஆக 24, 2015 | கருத்துகள் (9) | |
Advertisement
ஊட்டி : தொழில்நுட்பம் சார்ந்த, மாநில அளவிலான கற்பித்தல் போட்டியில், நீலகிரி அரசு பள்ளி ஆசிரியரின் படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும், ஆசிரியர்களுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு நடந்த மாநில அளவிலான இறுதி கட்ட தேர்வில், பல்வேறு பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்களின் அறிவை வளர்க்க அனிமேஷன்: அசத்துகிறார் ஆசிரியர்

ஊட்டி : தொழில்நுட்பம் சார்ந்த, மாநில அளவிலான கற்பித்தல் போட்டியில், நீலகிரி அரசு பள்ளி ஆசிரியரின் படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும், ஆசிரியர்களுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு நடந்த மாநில அளவிலான இறுதி கட்ட தேர்வில், பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களது படைப்புகளை வழங்கினர்.

அதில், நீலகிரி மாவட்டம், தேனாடு ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் தர்மராஜ், முதலிடம் பெற்றுள்ளார். அவர், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடங்களை, கம்ப்யூட்டர் முறையில், 'அனிமேஷன்' மற்றும் வீடியோ காட்சிகளாக மாற்றி, கற்பித்தல் மாற்று முறையை வடிவமைத்துள்ளார். கழிவு நீக்க மண்டலம், சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் பணி, வேரின் அமைப்பு மற்றும் பணி, தனிம வரிசை அட்டவணை, காடுகள், வன விலங்குகளின் பாதுகாப்பு, எலும்பு மண்டலம், மீன், தேனீ வளர்ப்பு, தாவர உலகம், அணு அமைப்பு உள்ளிட்ட பாடப் பகுதிகள், நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

'ஆன்ட்ராய்டு' மொபைல் போன் மூலம், கல்வி மென்பொருளை பயன்படுத்தி, தமிழ் அகராதி, வார்த்தை உச்சரிப்பு, திருக்குறள் வாசிப்பு, மேடைப் பேச்சுக்கு ஆயத்தமாக்குதல் போன்ற படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவரது படைப்பு, வரும் டிசம்பரில் நடக்கவுள்ள, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகள் குறித்து, ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது:மாணவர்கள் மத்தியில், கற்பனைத் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், பள்ளி சுவர்களில், பல விதமான ஓவியங்களை வரைந்து வைத்துள்ளேன். இதைத் தவிர, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள பாடங்களை, கம்ப்யூட்டர் மூலம், 'அனிமேஷன்' மற்றும் வீடியோ படக் காட்சியாக, 'சிடி' வடிவில் தயாரித்துள்ளேன்.


எல்லாமே 'அனிமேஷன்':

உதாரணமாக, சிறுநீரகத்தின் அமைப்பு தொடர்பான பாடத்தில், ஆறாம் வகுப்பில், சிறுநீரகத்தின் அமைப்பு மட்டும் இருக்கும்; ஏழாம் வகுப்பில், அதன் உள் அமைப்புகளும், எட்டாம் வகுப்பில் முழு விவரங்களும் அடங்கியிருக்கும். இதை, அனைத்து வகுப்பு மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், சிறுநீரகத்தின் அமைப்பு, செயல்பாடுகள் உள்ளிட்ட, அனைத்து விவரங்களையும், அனிமேஷன் முறையில் பதிவு செய்துள்ளேன். தேனீ வளர்ப்பு குறித்த பாடத்துக்காக, கன்னியாகுமரி, மார்த்தாண்டம் சென்று, தேனீ வளர்ப்பு கூடங்களை நேரில் பார்த்து, விவரங்களை, வீடியோவாக பதிவு செய்தேன். மீன் வளர்ப்பு பாடத்தின் அடிப்படையில், மீன் வளர்ப்பின் பிரதான இடங்களாக உள்ள பவானி சாகர், மேட்டூர் அணைக்கு சென்று, அதன் விவரங்களையும், வீடியோவாக பதிவு செய்துள்ளேன்.


மனதில் எளிதில் பதியும்:

முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு சென்று, காடுகள், அவற்றில் வாழும் விலங்குகள், அவற்றின் தன்மைகள் குறித்து அனிமேஷன் மற்றும் வீடியோ படக் காட்சியாக பதிவு செய்து, மாணவர்களுக்கு காட்டும்போது, உற்சாகமடைகின்றனர். பாடக் கருத்துக்கள், அவர்கள் மனதில், எளிதில் பதிகிறது. தாவரங்களின் வேர்கள், எலும்பு மண்டலம் உட்பட அனைத்து பாடங்களையும், 100 சதவீதம் முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில், தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ளேன். இதன் மூலம், மாணவர்கள், தாங்கள் படிக்கும் பாடத்தில் முழு அறிவையும் பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


'மைக்ரோசாப்ட்' விருது:

ஆசிரியர் தர்மராஜ், 33, எம்.ஏ., - எம்.பில்., - பி.எஸ்சி., - பி.எட்., ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.ஊட்டி பள்ளிக்கு, 2005ல் பணியிட மாறுதல் பெற்று வந்தபோது, வெறும் நான்கு மாணவர்கள் இருந்தனர். பள்ளியை மூட, அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தர்மராஜின் தளராத முயற்சியால், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2010ல், 23 ஆக அதிகரித்தது.
அந்த ஆண்டில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம், கற்பித்தலில் புதுமை படைத்ததற்காக, தேசிய அளவிலான விருதை, தர்மராஜிக்கு வழங்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-201517:43:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாழ்த்துக்கள். இதை பார்த்தாவது மற்ற அரசு ஆசிரியர்கள் மாற வேண்டும்.
Rate this:
Cancel
Durai - dallas,யூ.எஸ்.ஏ
24-ஆக-201517:35:36 IST Report Abuse
Durai அற்புதம்.டெக்னாலஜி-யை சரியாகப் பயன்படுத்தி மாணவர்களின் கற்கும் திறனை எளிமைப் படுத்தும் புது முயற்சி. அரசு இதனை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டுவர ஊக்கம் தர வேண்டும். ஆசிரியர் அவர்களே, உங்களின் முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Rate this:
Cancel
Balamurugan Palanichamy - Hyderabad,இந்தியா
24-ஆக-201516:29:09 IST Report Abuse
Balamurugan Palanichamy இன்னொரு அப்துல் கலாம் உறுதி . வாழ்த்துக்கள் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X