சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது

Updated : ஆக 27, 2015 | Added : ஆக 26, 2015 | கருத்துகள் (4)
Advertisement
அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை  ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது

சென்னையில், நேற்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். திரைக்கு வரவில்லை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த துணை நடிகை, நீத்து கிருஷ்ணன், 27. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார்.கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார். இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்.
போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் - மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்.

இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்.'நெட்வொர்க் 3' இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், 'நெட்வொர்க் 3' இயங்குவது தெரியவந்தது.நேற்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜ் தலைமறைவாகி விட்டார். இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-ஆக-201506:22:19 IST Report Abuse
Lion Drsekar பல கொலைகளுக்கு, இதுதான் முதல் படி. பிறகு வளர வளர், திருமணங்கள், பிள்ளைகள், கொலைகள், பல பரிமாணங்களில் வளர்ச்சி, இதுதான் இன்றைய நிலை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
27-ஆக-201518:46:59 IST Report Abuse
Amirthalingam Shanmugam திரும்பத் திரும்ப இதேபோல் திருட்டு வேலை செய்தே வயிறு வளர்ப்போம் என்பதே எங்கள் லட்சியம்.எப்போதுதான் திருந்துவார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
27-ஆக-201517:07:39 IST Report Abuse
Nalanvirumbi இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும் எங்க ஊர்ல கோயில் கட்டுவாங்க இல்ல மணி மண்டபமாவது கட்டுவாங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X