கடலுார்:பாராளுமன்ற மாதிரி கிராமத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட போத்திரமங்கலம் கிராமம் கல்வி, குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையை மூன்று மாதத்திற்குள் மாற்றிட அனைத்து துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.பிரதமர் நரேந்திரமோடி கடந்தாண்டு சுதந்திர தின உரையில், பாராளுமன்ற மாதிரி கிராமத் திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.,க்களும் ஆண்டிற்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்து முழுமை பெற்ற கிராமமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் கடந்த அக்டோபர் 11ம் தேதி பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
அதன்படி கடலுார் எம்.பி., அருண்மொழித்தேவன், மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த போத்திரமங்கலம் கிராமத்தை இத்திட்டத்திற்கு தேர்வு செய்தார். அதனையொட்டி, இக்கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வேலை அறிக்கை தயாரிக்கப்பட்டது.வேலை அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டம் நேற்று கடலுாரில், கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், பாராளுமன்ற மாதிரி கிராம திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள போத்திரமங்கலம் கிராமம் கல்வி, குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 30 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடை நின்றுள்ளனர். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று மருத்துவ வசதி சரிவர கிடைக்காத நிலை உள்ளது. அதனை மாற்றிடவும், தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உள்ளதால் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் போத்திரமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும். திட்டக்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். வருவாய் துறையின் செயல்பாடும் மந்தமாகவே உள்ளது. அதனை மாற்றிட கிராமத்தில் 'இ-சேவை' மையத்தை துவங்கி அனைவருக்கும் அனைத்து சான்றிதழ்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாற்றம் மற்றும் ஆதார் கார்டு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும்.
அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து, தங்கள் துறை சார்பில் ஒதுக்கப்படும் நிதியைக்கொண்டு போத்திரமங்கலம் கிராமத்தை மூன்று மாதத்திற்குள் முன்மாதிரி கிராமமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement