1,000 tonnes of onions in Afghanistan comes from the everyday | ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் வருகிறது வெங்காயம் 1,000 டன்: நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

புதுடில்லி: கடந்த வாரத்தில், உச்சத்திற்கு சென்ற வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், இரு நாட்களாக விலை குறைந்து வருகிறது. இருப்பினும், விலையை மேலும் குறைக்க, வெளிநாடுகளில் இருந்து, 10 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்கான முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, தினமும், 1,000 டன் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.




'ஆட்சியை மாற்றிய காய்கறி' என, பிற காய்கறிகளுக்கு இல்லாத பெருமை, வெங்காயத்திற்கு உண்டு. 1998ல், டில்லி மாநிலத்தில், முதல்வராக இருந்த, இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, சுஷ்மா சுவராஜ், வெங்காய விலை உயர்வால் ஆட்சியை இழந்தார்.இதையடுத்து, வெங்காய விலையை கட்டுக்குள் வைத்திருக்க,
மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இயற்கை சீற்றம்:

எனினும், விளைச்சல் குறைவு,

இயற்கை சீற்றங்கள், இறக்குமதி குறைவு போன்ற பல காரணங்களால், சந்தைகளுக்கு வெங்காயம் வரத்து குறைந்ததும், அவ்வப்போது விலை உயர்ந்து விடுகிறது. அதை எதிர்பார்த்து காத்திருப்பது போல, பதுக்கல்காரர்களும், வெங்காயத்தை பதுக்கி, செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் பார்த்து விடுகின்றனர்.

கடந்த வாரம், 1 கிலோ வெங்காயம், டில்லியில், அதிகபட்சம், 80 ரூபாயை தொட்டது. வெங்காயம் விளையும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களில், 60 - 75 ரூபாய் வரைவிற்கப்பட்டது.இதனால், மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. முதல் நடவடிக்கையாக, உள்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதியை தடுக்கும் நோக்கில், ஏற்றுமதி விலையை உயர்த்தி, உள்நாட்டில் வினியோகத்தை ஸ்திரப்படுத்தியது.

'டெண்டர்' :

அடுத்த நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்ய, உலகளாவிய, 'டெண்டர்' விடுக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு போதுமான அளவில், உள்நாட்டில் உற்பத்தி இருக்காது என அறிந்ததும், 10 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவே, இந்த டெண்டர் விடுக்கப்பட்டது.

அதிகபட்சம் கிலோ, 45 ரூபாய்க்கு அந்த டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில்,அந்த டெண்டரை, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று பெற முன்வந்துள்ளது. இன்னும், ஒரு சில நாட்களில் டெண்டர் இறுதியாகும். அப்போது, சீனா, பாகிஸ்தான்,

எகிப்து போன்றநாடுகளில் இருந்து வெங்காயத்தை வாங்கி, இந்தியாவுக்கு அந்த நிறுவனம், கப்பலில் கொண்டு வரும்.அந்த வெங்காயம், சென்னை துறைமுகம் வழியாக, தென் மாநிலங்களான, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு வினியோகம் செய்யப்படும். இதனால், தென் மாநிலங்களின் வெங்காய தேவை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பூர்த்தியாகும்.

விலை குறைந்தது!:

ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் இறக்குமதி செய்யப்படும், 1,000 டன் வெங்காயம், பாகிஸ்தான் வழியாக, இந்தியாவுக்கு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின், அட்டாரி - வாகா எல்லை வழியாக, டில்லி, அரியானா மற்றும் உ.பி., மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இதுபோக, வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகும் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து, அதன் அண்டை மாநிலங்களுக்கு, ஏராளமாக வினியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆசியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தையான, மகாராஷ்டிராவின் லசேகான் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால், இரு நாட்களாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து, கிலோ, 55 - 60 ரூபாயாக உள்ளது.சென்னையில் நேற்றைய நிலவரப்படி, சில்லரை விலையில், 1 கிலோ சின்ன வெங்காயம், 35 - 40 ரூபாய்க்கும், பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம், 70 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த விலை, வரும் நாட்களில் குறைய வாய்ப்பு உள்ளது.

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
29-ஆக-201519:58:07 IST Report Abuse

Nalanvirumbiவிளை நிலங்கள் எல்லாம் வெற்று நிலங்களாய் வெறும் காம்போவுண்டுக்குள் "ரியல் எஸ்டேட்டாக" மாறிவிட்டது. எங்கே விளையும் வெங்காயம்? ஏற்கனேவே து. பருப்பு விலை 150 ரூபா.. "என் மலரும் நினைவுகளாய் நாங்கள் விளைவித்து பிடுங்கி விற்ற வெங்காயம், துணி போட்டு களைப்பாறிய துவரம் செடிகள், சட்டியில் அவித்த துவரம் காய்கள்.....ஆக்கிரமிப்பில் போன அந்த இடம் இன்று ...எம் ஜி ஆர் நகர்.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
29-ஆக-201517:55:16 IST Report Abuse

mindum vasanthamபசுமை புரட்சி செய்தனர் அதில் நெல் , மற்றும் கோதுமையின் உற்பத்தி உயர்ந்தது ஆனால் பருப்பு வகைகள் பயன் அடையவில்லை ...வெங்காயம் விலையும் அடிக்கடி ஏறுகிறது இதனை தடுக்கு அரசு புதிய வாரியம் அமைக்க வேண்டும் மேலும் அரசே நேரடியாக வெங்காயம் கொள்முதல் குறிப்பிட்ட அளவு செய்தலும் செய்யலாம்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-201515:35:52 IST Report Abuse

Pugazh Vபி ஜே பி ஆட்சியில் வெங்காயத்துக்குக் கூட அயல்நாட்டை அதுவும் ஆப்கானிஸ்தானை எதிர் நோக்கியிருக்கும் நல்ல நாள் மலர்ந்தே விட்டது.அந்த அளவுக்கு நிர்வாகம் சீராக இருக்கிறது

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
29-ஆக-201515:09:00 IST Report Abuse

மஸ்தான் கனிநாட்டை வழிநடத்த தவறியதன் விளைவு தான் தினமும் விலைவாசி உயர்வு இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது,காங்கிரஸ் ஊழல் செய்தாலும் நிதிநிலைமை கட்டுக்குள் இருந்தது இப்போதுள்ள ஊழல் அரசுக்கு நிதிநிலைமை கட்டுக்குள் வைக்க தவறியதால் பணவீழ்ச்சி பாதாளத்திற்கு போய்விட்டது. ஜால்ரா கூட்டத்திற்கு புரியாது.

Rate this:
Jeeva Suriya - singapore,சிங்கப்பூர்
29-ஆக-201514:51:07 IST Report Abuse

Jeeva Suriyaஇறக்குமதி ஆகும் வெங்காயம் - இஸ்லாமிய வெங்காயமா அல்லது இந்துத்வா வெங்காயமா என்று விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

Rate this:
Anand Rao.v - Chennai,இந்தியா
29-ஆக-201518:48:37 IST Report Abuse

Anand Rao.vஅட போங்க சார் இங்கே வந்து மதம் பேசிக்கொண்டு.வரும் வெங்காயம் எல்லாம் வட நாட்டுக்கு தான் . நமக்கெல்லாம் பெரியாரின் கண்ணீர் துளிகள் வெங்காயம் தான். நமது விருதுநகர் அண்ணாச்சி நாட்டு செயதிகளைப்படித்தால் இப்படித்தான் தெற்கே பதுக்கல் இருக்கும்...

Rate this:
Jeeva Suriya - singapore,சிங்கப்பூர்
29-ஆக-201514:49:14 IST Report Abuse

Jeeva Suriyaவெங்காயம் "இந்துத்வா" வெங்காயமா அல்லது "இஸ்லாமிய" வெங்காயமா என்பதை மோடி அரசு தெளிவு படுத்துமா ???

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
29-ஆக-201515:11:24 IST Report Abuse

P. SIV GOWRIரெம்பமுக்கியம்...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
29-ஆக-201515:37:58 IST Report Abuse

இந்தியன் kumarஇது "மனிதம்" வெங்காயம் ஜீவா அவர்களே இந்தியன் குமார்...

Rate this:
தமாஷ் சிங்கம் - mumbai,இந்தியா
29-ஆக-201514:01:11 IST Report Abuse

தமாஷ் சிங்கம்சாமி எனக்கு ஒரு டௌட்டு. இவ்ளோ விவசாய நிலம் இருக்குற இந்தியால வெங்காயம் இல்லை, வெறும் பாலைவனமும் மலையும் இருக்குற ஆப்கன்ல இருந்து வெங்காயம் வருது , என்ன கொடுமை சரவணன் இது .

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஆக-201517:35:51 IST Report Abuse

தமிழ்வேல் அங்கெ பல கஷ்டத்துக்கு நடுவுலே நடவு செய்து விவசாயம் பண்ணி வெளிநாட்டுக்குக் கூட அனுப்ப முடிகின்றது... நாமோ விலை நிலங்களை தரிசாக்கி ரியல் எஸ்டேட்டுக்கு அனுமதிக்கின்றோம்....

Rate this:
SINGA RAJA - MADURAI,இந்தியா
29-ஆக-201512:56:47 IST Report Abuse

SINGA RAJAஇனி யாரையும் கோபத்தில், போடா வெங்காயம் என்று திட்ட முடியாது. அற்பமாக நினைத்து கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக திட்டுவதற்கு ' வெங்காயம் ' உதவியது. இப்போது அதுவே ரொம்பவும் பாப்புலராகிவிட்டதால் அதுவும் காஸ்ட்லி ஆகிவிட்டது. இன்று சந்தையில் முக்கியப் பொருளாகவும் இருக்கிறது. வெங்காயத்திற்கு மாற்று வரும் வரையில் இப்படித்தான் இருக்கும். உரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை என்றாலும்கூட, வெங்காயம் பற்றிய செய்திகளை நம் பத்திரிக்கைகள் முக்கியச் செய்தியாக்கி வெளியிடுவதில் அலாதி சுகம் காணுகின்றன. இதனை யார் மென்றுவிட்டுப் பேசினாலும் கூட, அவரது வாய் நாராசமாய் நாறும். இருந்தபோதிலும், வெங்காயம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சிலர் வெங்காயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள். அதனால், வெங்காயமும் ' எல்லைதாண்டி ' வந்து தற்போது விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. இங்கேயும் அங்கேயுமாக பேச்சினால் அடிபடும் போதும், இந்த வெங்காயம் ரொம்ப முக்கியமாக " சாம்பாருக்கு " தேவைப்படுகிறது. ஈவேரா.பெரியார்கூட, வெடுக்கென்று, யாரையும் வெங்காயங்களா என்று பேசிவிடுவார். அத்தனை பெருமைகளையும், பேறுகளையும் பாரம்பரியமாகப் பெற்றிருக்கும் இந்த ' வெங்காயத்தை ' யாராவது உரிக்கும்போது கிட்டே சென்றுவிட்டால் போதும், ஒரே கண் எரிச்சல்தான். கமகம நறுமணம் தான். ஆக, வெங்காயம் என்றாலே சமையலும்தான், அரசியலும்தான் போலும்.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-ஆக-201512:24:43 IST Report Abuse

Pasupathi Subbianகுறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் வெங்காயம், அதிக விலையில் இறக்குமதி செய்யும் அவலம். ஏன் இதை முன்கூட்டி கணிக்க முடியாதா ? ஏன்

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
29-ஆக-201511:04:33 IST Report Abuse

P. SIV GOWRIகொஞ்ச நாளைக்கு இந்த வெங்காயத்தை திரும்பி பார்க்காமல் விட்டு விடுங்க. அப்போ தானா வழிக்கு வரும்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஆக-201517:37:03 IST Report Abuse

தமிழ்வேல் நம்ம வீட்ல தெனைக்கும் ஓட்டல் சாப்பாடாம்மா ?...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X