வீட்டுக் கடன் பெயரில் பல கோடி ரூபாய் முறைகேடு: வங்கி அதிகாரிகள் கைது

Updated : நவ 26, 2010 | Added : நவ 24, 2010 | கருத்துகள் (20) | |
Advertisement
 மும்பை : வீட்டுக் கடன் வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் நாயர் மற்றும் பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் உட்பட எட்டு பேரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது.நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டுவதற்கு

 மும்பை : வீட்டுக் கடன் வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் நாயர் மற்றும் பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் உட்பட எட்டு பேரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது.நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டுவதற்கு வசதியாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம், மத்திய அரசு கடனுதவி வழங்கி வருகிறது. இதில்,எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை ஓரளவு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி வருகின்றன. இவ்வாறு கடனுதவி வழங்குவதில் சில தனியார் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் இருந்து லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்து அந்நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து, பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டில்லி, மும்பை, கோல்கட்டா, ஜலந்தர் ஆகிய நகரங்களில் செயல்படும் எல்.ஐ.சி., உட்பட பல நிறுவனங்களில் திடீர் ரெய்டு நடத்தியது. இதில், ஏராளமான ஆவணங்களை சி.பி.ஐ.,அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, மும்பையில் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் தலைமை செயல் அதிகாரி ராமசந்திரன் நாயர், எல்.ஐ.சி., இன்வெஸ்ட்மென்ட் நிறுவன செயலர் நரேஷ் கே.சோப்ரா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா இயக்குனர் மனீந்தர் சிங் ஜோகர், பஞ்சாப் நேஷனல் பாங்க் துணை பொது மேலாளர் வென்கோபா குஜ்ஜல், பாங்க் ஆப் இந்தியா பொதுமேலாளர் ஆர்.என்.தயாள் ஆகியோரை சி.பி.ஐ.,கைது செய்துள்ளது. இதற்காக இடைத்தரகர்களாக செயல்பட்ட மும்பையைச் சேர்ந்த மணி மேட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரும், தலைவருமான ராஜேஷ் சர்மா, சுரேஷ் கட்டானி உட்பட மூன்று பேரையும் சி.பி.ஐ., கைது செய்து விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக சி.பி.ஐ., கடந்த 22ம் தேதி தான் வழக்கு பதிவு செய்தது. மறுநாளே விசாரணையை முடுக்கிய சி.பி.ஐ., அதிவிரைவாக ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றி, கைது நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது. இதில், எத்தனை கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர் என்பது குறித்து சி.பி.ஐ., தெரிவிக்கவில்லை. எனினும், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வழக்கில் மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


சி.பி.ஐ.,வழக்கு: பங்கு விலை வீழ்ச்சி: வீட்டுக் கடன் வழங்கியதில் நடைபெற்றதாக சி.பி.ஐ.,விசாரித்து சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் எல்.ஐ.சி.,ஹவுசிங் நிறுவன பங்குகள் நேற்று பலத்த வீழ்ச்சி அடைந்தன. நேற்று முன்தினம் ஒரு பங்கு ஆயிரத்து 68 ரூபாய் 55 காசுகளாக முடிவடைந்த நிலையில், நேற்று மட்டும் பங்கின் விலை 239 ரூபாய் குறைந்தது.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த்பாபு - கரூர்,இந்தியா
30-நவ-201011:10:10 IST Report Abuse
ஆனந்த்பாபு இதற்க்கு சரியான தீர்வு மரணம் தான். ஊழல் செய்தவரை மீடியாக்களின் துணையோடு நாட்டில் உள்ள மக்கள் எல்லாரும் பார்க்கும்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும் . அது யாராக இருந்தாலும் சரி. இப்படிக்கு உணர்வுள்ள மனிதன்
Rate this:
Cancel
nisar - dubai,இந்தியா
27-நவ-201015:59:32 IST Report Abuse
nisar லோடுக்கு பாண்டி நிங்கள் கூறியது மிகவும் உண்மை
Rate this:
Cancel
ரமேஷ் - கோயம்புத்தூர்,இந்தியா
26-நவ-201021:59:53 IST Report Abuse
ரமேஷ் நண்பர்களே, இது ஒரு கண்கட்டும் விளையாட்டு. நாம எல்லாம் ராஜா, கல்மாடி செய்த ஊழல் மற்றும் பீகார் காங்கிரஸ் தோல்வி இத மறக்க வேணாமா? அதுக்குதான் இந்த விவகாரம். அய்யா ஒரு கோட்டை அழிக்காம எப்படி சின்னதா மாத்துவிங்க - பக்கத்தில ஒரு பெரிய கொடு போட்டா போச்சு. அப்படி தாங்க இவங்க பெரிய ஊழல மறக்கடிக்க இந்த விளையாட்டை ஆரம்பிச்சு இருக்காங்க. ஏன்னா நமக்குத்தான் மறதி அதிகம்னு அரசியல்வாதிக்கு தெரியுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X