அரசியல் செய்தி

தமிழ்நாடு

போர் கப்பலை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி

Added : செப் 01, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'மத்திய அரசு சார்பில், இலங்கைக்கு போர் கப்பல் வழங்கப்பட்டிருப்பதை திரும்பப் பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கை அரசு, அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து, பல இன்னல்களை விளைவித்த போதிலும், இலங்கை அரசுக்கு உதவி செய்வதை, மத்திய அரசு நிறுத்தவில்லை.அந்த வரிசையில், கடலோர காவல் படைக்குச் சொந்தமான, 'விரஹா' என்ற போர் கப்பலை, சிங்கள கடற்படைக்கு, மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.இலங்கை ராணுவத்தினருக்கு, கடந்த காலத்தில், மத்திய அரசு, இதுபோல் தான் பயிற்சி கொடுத்தது; அந்த வரிசையில் தற்போது, போர் கப்பல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு, தி.மு.க., சார்பில் எதிர்ப்பை தெரிவிப்பதோடு, போர் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
01-செப்-201508:26:40 IST Report Abuse
a natanasabapathy தங்கள் ஆதரவுடன் தான் 2000 தமிழர்கள் இலங்கை போரில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் படுகொலை செய்யப்பட்டனர் என்று அனைவரும் குற்றம் சாட்டி உள்ளனர். அப்போது வாயை மூடி கொண்டிருந்த நீங்கள் இப்போது கூப்பாடு போடுவது தேர்தலை மனதில் வைத்து தானே? சோனியாவுக்கு சகல ஆதரவையும் அளித்து தமிழனை அழிதுவிட்டு முதலை கண்ணீர் வடிக்காதீர்கள். மக்கள் உங்களை நம்பிய காலம் முடிந்து விட்டது. அடுத்த முதல்வர் யார் என்ற சண்டை உங்கள் குடும்பத்தில் ஆரம்பித்து விட்டது. அதை கவனியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X