தமிழ்நாடு

சுத்திகரிப்பு வசதியில்லாததால் குடிநீரில்மண்: பொதுமக்கள் அவதி

Added : செப் 01, 2015
Advertisement
 சுத்திகரிப்பு வசதியில்லாததால் குடிநீரில்மண்: பொதுமக்கள் அவதி

தாண்டிக்குடி:தாண்டிக்குடி ஊராட்சியில் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக சப்ளை செய்யும் குடிநீரில் மண் கலந்து வருவதால் பொதுமக்கள் பாதித்துள்ளனர்.தாண்டிக்குடி ஊராட்சிக்கு 1960 ல் மருதாநதி ஆற்றுப்படுகையில் தடுப்பனை ஏற்படுத்தி, ஈர்ப்பு விசை மூலம் நகர்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை ஜல்லி, மணல் கலந்த அறையில் சுத்திகரிப்பு செய்து பின் நீர்தேக்க தொட்டியில் குளோரின் கலந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது சுத்திகரிப்பு செய்யாமல், ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நேரடியாக சப்ளை செய்யப்படுகிறது. மழை நேரத்தில் அடித்து வரப்படும் மண், கழிவுகள் தொட்டியில் சேர்ந்து அடைப்பு ஏற்படுகிறது. தொட்டியிலிருந்து சப்øயாகும் குடிநீரில் மண் கலந்து வருகிறது. பிடித்து வைக்கப்படும் குடிநீரில் மண் படிந்து அசுத்தமாக உள்ளது. குடிநீரை வேறு வழியின்றி பொதுமக்கள் பயன்படுத்தி பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஊள்ளாட்சி நிர்வாகமும் சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்த தயக்கம் காட்டி வருகிறது. மாவட்ட நிர்வாகம் தாண்டிக்குடி ஊராட்சியில் சுத்திகரிப்பு வசதியுடன் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர் மரகதம் கூறுகையில்," புதிததாக உயர்த்தி கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் களிமண் படிமம் சேர்ந்துள்ளது. இதனால் குடிநீரில் மண் கலக்கிறது. தடுப்பனையில் உள்ள மண்ணை அள்ளவும், சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X