தமிழ்நாடு

"டிவிக்' திட்டம் மூலம் சிறு சாயப்பட்டறை கழிவு சுத்திகரிப்பு: காவிரி மாசுபடுவதை தடுக்க ஈரோட்டில் ஆய்வு

Added : செப் 01, 2015
Advertisement

ஈரோடு: காவிரி ஆற்றில், சாயக்கழிவு கலப்பை தடுக்கும் வகையில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, "டிவிக்' திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தோல், சாய, சலவை ஆலைகள், அங்கீகாரம் இன்றி செயல்பட்டது கண்டறியப்பட்டால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த, 2011 முதல் இடித்து அகற்றப்படுகிறது. ஆலையின் செயல்பாட்டுக்கு ஏற்ப, மின் இணைப்பு துண்டிப்பு, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்தல் என, இதுவரை, 399 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருநிறுவனங்கள் சுத்திரிப்பு செய்து தண்ணீரையும், சில நேரங்களில் சுத்திகரிப்பு செய்யாமலும், காவிரியில் கலக்க செய்கின்றனர். குறிப்பாக, காவிரியை ஒட்டிய, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இருந்து அதிகளவில் சாயக்கழிவு, ஆற்றில் கலக்கின்றன. வீட்டில் வைத்து சிறு தொழிலாக, இம்மாவட்டத்தில் மட்டும், 150க்கும் மேற்பட்டோர், சாயத்தொழில் செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் பைப் வழியாகவும், சாக்கடை ஓடையிலும், சாயத்தண்ணீரை திறந்து விடுகின்றனர். இதற்கு மாற்றாக, தமிழக அரசு கடந்தாண்டு, "டிவிக்' (தமிழ்நாடு வாட்டர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்) என்ற திட்டத்தில், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில், நிலத்தை தேர்வு செய்து, க்ளஸ்ட்டர் அமைத்து, சிறு சாயப்பட்டறைகளை ஒரே வளாகத்தில் உருவாக்கி, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. முதற்கட்டமாக, இது, ஈரோடு மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்காக கடந்த வாரம், சென்னை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி பொறியாளர்கள் அடங்கிய, 5 பேர் கொண்ட, 6 குழுக்கள், இப்பகுதியில் முழுமையாக ஆய்வு செய்து, சென்னைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய, ஈரோடு மாவட்ட செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் கூறியதாவது: இதுவரை, 399 சாய, தோல் பட்டறைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்குவார்டு மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடத்தினாலும், தகவல் பரவி, ஆற்றில் கலப்பதை நிறுத்தி விடுகின்றனர். சிறு சாயப்பட்டறைகள், 200 முதல், 500 லிட்டர் வரை, குறைந்தளவே கலப்பதால், எங்கிருந்து வருகிறது என்று கண்டறிவது சிரமமாக உள்ளது. பொறியாளர்கள் அடங்கிய, ஆறு பேர் கொண்ட குழு, கடந்த வாரம், காவிரி ஆற்றில் சாயப்பட்டறைகளால் கலக்கப்படும் சாயக்கழிவின் மொத்த அளவு, சிறு சாயப் பட்டறைகளின் எண்ணிக்கை, திட்டத்துக்கு தேவைப்படும் நிலப்பரப்பளவு என்று பல்வேறு அம்சம் குறித்து ஆய்வு செய்து, சென்னைக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பெருந்துறை சிப்காட்டில், ஏற்கனவே ஒரு தொழிற்சாலைக்கான இடம் இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டத்தில் தான், "டிவிக்' திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. தற்போது, 85 சதவீதம் வரை, சாயக்கழிவு கலப்பது தடுக்கப்பட்டுள்ள நிலையில், அத்திட்டம் நிறைவேறினால் முழுமையாக, காவிரி பாதுகாக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X