மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு

Added : செப் 02, 2015
Share
Advertisement
புதுடில்லி:'மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு சரிவர பூர்த்தி செய்து வருகிறது' என, சுப்ரீம் கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்'சில் நேற்று விசாரிக்கப்பட்டது.அப்போது, டிவிஷன் பெஞ்ச்

புதுடில்லி:'மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு சரிவர பூர்த்தி செய்து வருகிறது' என, சுப்ரீம் கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்'சில் நேற்று விசாரிக்கப்பட்டது.அப்போது, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு சரிவர பூர்த்தி செய்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளை வேண்டுமென்றே, மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற வாதம் சரியில்லை.மேலும், இதில் எந்தவிதமான ஒளிவுமறைவான செயலிலும், மத்திய அரசு ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது; மத்திய அரசின் செயல்பாடுகளை வரவேற்கிறோம்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.
பல வழக்குகளில், மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் சுப்ரீம் கோர்ட், நேற்று பாராட்டு தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X