வரிசை கட்டி நிற்கும் முதல்வர் வேட்பாளர்கள்: பா.ஜ., திணறல்

Updated : செப் 06, 2015 | Added : செப் 06, 2015 | கருத்துகள் (12)
Advertisement
வரிசை கட்டி நிற்கும் முதல்வர் வேட்பாளர்கள்: பா.ஜ., திணறல்

பீகார் தேர்தலில், சொந்த கட்சி பிரபலங்களில் துவங்கி, கூட்டணிக் கட்சி நண்பர்கள் வரை, ஏராளமானோர், முதல்வர் வேட்பாளர்களாக துடிக்கின்றனர். இதனால், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், பா.ஜ., தலைமை சிக்கித் தவிக்கிறது.


வழக்கம்:

இதன் பின்னணி குறித்து, டில்லியில் நேற்று, பா.ஜ.,வின் தகவலறிந்த வட்டாரங்கள்கூறியதாவது:நரேந்திர மோடி பிரதமரான பின் நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் நடந்த, ஜம்மு - காஷ்மீர் தேர்தலிலும் கூட, இதே நிலைமை தான் இருந்தது.டில்லி சட்டசபை தேர்தல், கெஜ்ரிவாலுக்கு கடும் போட்டியை தந்தாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில், கட்சிக்கு சம்பந்தமில்லாத கிரண் பேடியை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, கிட்டத்தட்ட அதே நிலை தான் பீகாரிலும் ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம், பா.ஜ.,வில் உள்ளது. காரணம், 10க்கும் மேற்பட்ட முக்கிய தலைகள், முதல்வர் வேட்பாளர் பந்தயத்தில் வரிசை கட்டி நிற்பது தான்.


யார், யார்?

பட்டியலில் முதலில் இருப்பவர், சுஷில்குமார் மோடி; பீகார் பா.ஜ.,வின் முகம். 10 ஆண்டுகளாக, துணை முதல்வராக இருந்தவர். கட்சியை கடந்து, பொதுமக்களிடமும் நல்ல பெயர் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கூட விமர்சனம் செய்யுமளவுக்கு வெளிப்படையானவர். அடுத்ததாக, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான, சி.பி.தாக்கூர், வெளிப்படையாகவே தன் ஆசையை கூறிவிட்டார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் களத்தில் உள்ளார். லாலு பிரசாத்தின் ஓட்டு வங்கியை உடைக்க வேண்டுமெனில், பெரும்பான்மையான யாதவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இந்த பின்னணியில், முன்னாள் பா.ஜ., மாநில தலைவர், நவல்கிஷோர் யாதவ் மற்றும் லாலு பிரசாத்தின் வலதுகரமாக இருந்து, கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வில் சேர்ந்து, எம்.பி.,யாகியுள்ள, ராம்கிருபால் யாதவ் ஆகியோரது பெயர்கள் முன்னணியில் உள்ளன.


வாய்ப்பு:

கூட்டணி கட்சியான, லோக் ஜனசக்தி தலைவர், ராம்விலாஸ் பஸ்வான், தனக்கு முதல்வர் வேட்பாளராவதில் விருப்பம் இல்லை என பேட்டியளித்தாலும், கட்சியின் மாநில தலைவரான அவரின் தம்பி, 'முதல்வர் பதவிக்கு அண்ணன் தான் பொருத்தமானவர்' என, பேட்டிகளில் வலியுறுத்துகிறார். பஸ்வானைப் போலவே, தனக்கும் விருப்பமில்லை என, பா.ஜ., - எம்.பி., சத்ருகன் சின்கா கூறி வருகிறார். ஆனால், பீகாரின் நட்சத்திர முகம் என்ற அந்தஸ்து காரணமாக, தனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என, இவரும் காத்திருக்கின்றனர். இன்னொரு கூட்டணி கட்சித் தலைவரான, உபேந்திரா குஷ்வாகாவும், தன்னை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென, பா.ஜ.,விடம் கோரிக்கை வைத்துள்ளார்.இவர்களை தவிர, பீகாரைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத்தும், ராஜிவ் பிரதாப் ரூடியும், தங்களது டில்லி தொடர்புகளை வைத்து காய் நகர்த்துகின்றனர்.இதன் காரணமாக, பீகார் தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா, வேண்டாமா என்ற பெரும் குழப்பத்தில், பா.ஜ., ஆழ்ந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பீகார் சட்டசபைத் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டு விட்டார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-201520:44:13 IST Report Abuse
Pugazh V ஆர் எஸ் எஸ் தீர்மானிக்கும், நீங்கள் எதுக்கு அலட்டிக் கொள்கிறீர்கள்/?
Rate this:
Share this comment
Cancel
Murukesan - Kannankulam,இந்தியா
06-செப்-201517:07:54 IST Report Abuse
Murukesan பீகார் தேர்தலில் பட்டியலில் முதலில் இருப்பவர், சுஷில்குமார் மோடி பீகார் பா.ஜ.,வின் முகம். 10 ஆண்டுகளாக, துணை முதல்வராக இருந்தவர். கட்சியை கடந்து, பொதுமக்களிடமும் நல்ல பெயர் உள்ளது இவர் தான் பொருத்தமாக இருப்பார் - முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை சந்தியுங்கள் அதுவே பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.முதல்வர் வேட்பாளர் அறிவித்துவிட்டால் கோஷ்டி பூசல்கள் வெற்றியை பாதிக்கும் .
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
06-செப்-201516:31:18 IST Report Abuse
mindum vasantham சுஷில் குமார் மோடியை போடுங்கள் நன்கு படித்தவர் , சதி மதங்கள் அப்பால் தான் விரும்பிய பெண்ணை மணம் செய்தவர் .... சாதி அரசியலுக்கு அப்பால் இருப்பவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X