அனுமதி தராவிட்டாலும் போராட்டம் ; எச்சரிக்கிறார் சா ( தீ ) தலைவர் பட்டேல்

Added : செப் 06, 2015 | கருத்துகள் (25)
Share
Advertisement
சூரத்: குஜராத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் தண்டி யாத்திரையை வரும் 13 ம் தேதிக்கு போராட்டக்குழு தலைவர் ஹார்திக் பட்டேல் ஒத்தி வைத்துள்ளார் . இதற்கும் அனுமதி தராத பட்சத்தில் போராட்டம் நடந்தே தீரும், இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு அரசு தான் பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளார் .கடந்த சில நாட்களுக்கு முன்னர், பட்டேல் இன மக்களுக்கான இட
எச்சரிக்கிறார் சா ( தீ ) தலைவர் பட்டேல்

சூரத்: குஜராத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் தண்டி யாத்திரையை வரும் 13 ம் தேதிக்கு போராட்டக்குழு தலைவர் ஹார்திக் பட்டேல் ஒத்தி வைத்துள்ளார் . இதற்கும் அனுமதி தராத பட்சத்தில் போராட்டம் நடந்தே தீரும், இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு அரசு தான் பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளார் .கடந்த சில நாட்களுக்கு முன்னர், பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடத்தப்பட்ட முழு கடையடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது . இதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.


தமது போராட்டம் நாடு முழுவதும் ஆதரவு திரட்டி, பெரிய அளவில் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார் .


இன்று (செப்.,6) சூரத்தில் தண்டி யாத்தியை நடத்த திட்டமிட்டிருந்தார் . ஆனால் அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை . இதற்கு குஜராத் அரசு தான் காரணம் என ஹர்திக் பட்டேல் கடுமையாக சாடியுள்ளார் .


இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்; நாங்கள் எங்களின் போராட்டத்திற்கு முறையான அனுமதி கேட்டோம். ஆனால் மறுக்கப்படுகிறது. இது எங்களை கண்டு அரசு அச்சப்படுகிறது என்பதையே காட்டுகிறது . எனினும் போராட்டத்தை வரும் 13 ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். அன்றும் அனுமதி மறுக்கப்பட்டால் மீறி போராட்டம் நடத்துவோம் . அரசு தான் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்கிறது . இவ்வாறு பட்டேல் கூறினார் .

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajamanickam Perumal - chennai,இந்தியா
07-செப்-201510:47:08 IST Report Abuse
Rajamanickam Perumal இத ஒரு பின்தங்கிய ஜாதி தலைவர் செய்தால் சரி என்பிர்கள் .இந்த நாடு முதலில் ஜாதி இல்லை என்று சொல்லட்டும் அம்புரம் நீங்கள் இவரை ஜாதி தலிவர் என்று சொல்லலாம். நீங்கள் அவர் இடத்தில இருந்து யோசிக்கவேண்டும் .
Rate this:
Cancel
shyam - Bangalore,இந்தியா
07-செப்-201510:43:19 IST Report Abuse
shyam கடவுள் தந்த பேச்சு திறனை வைத்து இவர் வெளி நாடு சென்று புளைகலாம்...அதை விட்டு சாதி இனம் என்று பேசி பலரின் முறைப்புக்கு ஆளாகிறார். இவரை இவாறு பேச வைத்து வேடிக்கை பார்க்கும் அரசியல் வியாதி களுக்கு என்ன உள்நோக்கமோ. மோடியின் வளர்ச்சி பணிகளை திசை திருப்ப கிழப்பி விட்டாற்போல்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-201520:40:24 IST Report Abuse
Pugazh V குஜராத் மாடல் நல்லா இருக்கு. சும்மா இந்த ஆளை திட்டுவதும், தூண்டிவிடப்படுகிறார் என்றும் உளறாதீர்கள். இவ்வாவு பேரை தூண்டிவிடக் கூடிய பவர் ஒரு ஆளுக்கு அல்லது ஒரு கட்சிக்கு இருக்கிறதென்றால், இந்நேரம் அந்த ஆள் குஜராத் முதல்வராகவும், அந்தக் கட்சி குஜராத்தின் ஆளும் கட்சியாகவும் இருந்திருக்குமல்லவா? நிர்வாகத் திறன் அற்றவர்களின் கையில் ஆட்சி என்பதற்கான சான்று இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X