பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு செல்ல ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

Added : நவ 25, 2010 | கருத்துகள் (11)
Advertisement
பள்ளிக்கு செல்ல ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

வருஷநாடு : வருஷநாடு மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால், மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மலைக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீர்வரத்து சற்று குறைந்தவுடன் நான்கு நாள் இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளி சென்று வருகின்றனர்.


தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மூலவைகையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராயர்கோட்டை, உருட்டிமேடு, கல்லுருண்டான்சுனை, கோமாளி குடிசை உட்பட பல மலைக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் இருந்து வருஷநாடு செல்ல, ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், வெள்ளத்தை கடந்து சென்று வருகின்றனர். நான்கு நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவர்கள், ஐந்தாவது நாள் வெள்ளத்தின் சீற்றம் ஓரளவு குறைந்த பின், ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். ஆற்றில் ஐந்தடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், கிராம மக்கள் ஒன்று கூடி வரிசையாக தண்ணீருக்குள் இறங்கி நின்று, மாணவ, மாணவிகளை கையை பிடித்து தூக்கி, ஆற்றுக்கு மறு பக்கம் கடத்தி விடுகின்றனர். மாலையில் பள்ளி முடிந்த பின்னரும், இதேபோல் தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்கின்றனர். அறுபது ஆண்டுகளாக இவ்வாறு ஆற்று வெள்ளத்தோடு மக்கள் போராடி வருகின்றனர்.


எஸ்.பவுன்தாய் (32): ஆண்டுக்கு ஐந்து மாதம் ஆற்றில் வெள்ளம் செல்கிறது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கூட ஊரைவிட்டு வெளியேற முடியாதநிலை. கர்ப்பிணிகள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்தவர் இறந்து விட்டால் அவரது உடல் கிராமத்திற்குள் இருக்கும். உறவினர்கள் ஆற்றின் மறு கரையில் நின்று அங்கேயே மாலை போட்டு அஞ்சலி செலுத்தி விட்டு உடலை பார்க்காமலேயே திரும்பிவிடுவர்.


கே.லட்சுமி (40): பாலம் வசதி இல்லாததால் யாரும் இங்குள்ள மாப்பிள்ளைகளுக்கு பெண் தருவதில்லை. ஆற்றில் வெள்ளம் செல்லும் போது, விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாது. கறந்த பாலை கீழே ஊற்ற வேண்டிய நிலை வரும். அரிசி, ரேஷன் பொருள் என எதுவுமே வாங்க முடியாது. ஆற்றில் வெள்ளம் செல்லும் காலங்களில் பெண்கள் பாடு திண்டாட்டம் தான்.


ஆர்.அருண்குமார்(14), மாணவர்: தினமும் ஆற்றை கடந்து சிரமப்பட்டு, பள்ளி சென்ற பின் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மீண்டும் வீடு திரும்ப 12 கி.மீ., தூரம் நாங்கள் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பல நாட்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.


எம்.சிநேகா(12) மாணவி: ஆற்றுக்குள் இறங்கி பள்ளிக்கு வருவதால் உடைகள் நனைந்து விடுகின்றன. இதனால் பள்ளி விளையாட்டு திடலில் ஒரு மணி நேரம் நின்று உடைகளை காய வைக்க வேண்டும். பள்ளி வந்த பின், மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நாங்கள் ஒற்றையடி பாதை வழியாக ஊர் திரும்புவது சிரமம். எனவே பள்ளியிலேயே தூங்கி விடுவோம். அன்று இரவு பட்டினி தான். மறுநாள் காலை எங்கள் பெற்றோர்கள் சாப்பாடு கொண்டு வரும் வரை நாங்கள் சாப்பிடுவது சிரமம்.


எம்.மலர்க்கொடி, தலைமை ஆசிரியர், முருக்கோடை அரசு உயர்நிலைப்பள்ளி: முன்புபோல் தற்போது மாணவர்களை பள்ளியில் தங்க வைக்க அனுமதியில்லை. எனவே, கிராமத்து மக்களை தேடிப்பிடித்து அவர்களுடன் மாணவர்களை அனுப்பி வைத்த பின், நாங்கள் வீடுகளுக்கு செல்வோம். வைகையில் அதிக வெள்ளம் வரும் காலங்களில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளத்தை கடக்க முடியாமல் பள்ளிக்கு வருவதில்லை. தேர்வு நேரத்தில் மழை பெய்தால் தேர்வு எழுத முடியாமல் பெயிலாகி விடுகின்றனர்.


தெய்வம், முருக்கோடை பஞ்சாயத்து தலைவர்: இங்கு பாலம் கட்ட வேண்டும் என துணை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக இருமுறை சந்தித்து மனு கொடுத்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம். ஆனால், எந்த பலனும் இல்லை. அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும்.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குரு - திருவாரூர்,இந்தியா
26-நவ-201023:58:58 IST Report Abuse
குரு எல்லாத்தையும் இலவசமா எதிர்பார்க்கல ஒரு அரசு தன் கடமையை செய்ய கோரிக்கை வைக்கிறோம், சுமார் 70 மாணவர்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆற்றை கடந்து செல்வது என்பது கடினம். அதே சமயம் அற்றை கடக்கும் பொது எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்க்காகவே மட்டும் அல்லாமல் மக்களின் உபயோகதிர்ககவும் பாலம் கட்டவேண்டும். அந்த கிராமத்து மக்களும் இந்த முறையாவது நமக்கு நல்லது நடக்கும் என்றுதான் ஓட்டு போடுகின்றனர். அனால் அரசியல்வாதிகளோ தன்னுடைய பாக்கெட் நிறைந்தால் போதும், தன்னுடைய குடும்பம் , சந்ததி வளர்ந்தால் போதும் என்று சுயநலத்தோடு இருக்கின்றனர். இனியாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்.....
Rate this:
Share this comment
Cancel
பச்சைத் தமிழன் - புலவர் வேலாங்குடி,இந்தியா
26-நவ-201021:02:34 IST Report Abuse
 பச்சைத் தமிழன் இந்த இடத்துல ஏற்கனவே பாலம் கட்டியாச்சு வேணும்னா ரெகார்ட் எடுத்து பாருங்க. ஆனா பாலம் எங்கனு மட்டும் கேக்காதிங்க........
Rate this:
Share this comment
Cancel
சாம் - Bangalore,இந்தியா
26-நவ-201014:02:14 IST Report Abuse
சாம் City Students are Going to by A.C Bus. Really Sad this Children's are taking HIGH Risk in the life. தெய்வம், முருக்கோடை பஞ்சாயத்து தலைவர்: இங்கு பாலம் கட்ட வேண்டும் என துணை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக இருமுறை சந்தித்து மனு கொடுத்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம். ஆனால், எந்த பலனும் இல்லை. அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். Send this Photo to CM immediately. DO Something before something Happen to this Children's. Otherwise you are going to waste one more Inquiry Commission...time..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X