திமிங்கிலத்தின் 'வாந்தியின் விலை' ரூ.5,60,000

Updated : செப் 08, 2015 | Added : செப் 08, 2015 | கருத்துகள் (15)
Advertisement
திமிங்கிலத்தின் 'வாந்தி' ரூ.5,60,000

லண்டன்: திமிங்கிலத்தின் ஒரு கிலோ எடையுள்ள வாந்தி, லண்டனில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. கடலில் மற்ற உயிரினங்களை 'சுவாகா' செய்வது திமிங்கிலத்தின் வழக்கம். அதில் கூர்மையான முட்களுடன் கூடிய உயிரினங்களும் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் சென்று விடும்.

அப்படி செல்லும் முட்களால் திமிங்கிலத்தின் குடலுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இயற்கையாகவே திமிங்கிலத்தின் குடலில் 'அம்பர்கிரிஸ்' (இதைத் தான் நாம் அம்பர் என அழைக்கிறோம்) என்ற வஸ்து சுரக்கிறது. இந்த வஸ்துவை, திமிங்கிலம் வாந்தியாக எடுத்து விடும்.

பல நாட்கள் கடல் அலைகளால் தள்ளப்படும் இந்த அம்பர், எப்போதாவது கரை ஒதுங்கும். இதை சேகரித்து ஏலம் விடுவர். இந்த அம்பரில் இருந்து ஏராளமான வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுவதால், இதற்கு எப்போதும் கிராக்கி அதிகம்.
சென்ற வாரம்: இப்படித் தான் ஒருவர் சென்ற வாரம், இங்கிலாந்தின் கடற்கரை ஓரம் தன் நாயுடன் 'வாக்கிங்' சென்றார். அப்போது கறுப்பாக பாறை போல் 'அம்பர்' கரையில் ஒதுங்கி இருந்தது. சுமார் 1.1 கிலோ எடை இருந்த அம்பரை சேகரித்த அந்த நபர் லண்டன் ஏலக்கடைக்கு எடுத்துச் சென்றார்.

இது இன்று ஏலம் விடப்பட்டபோது, 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதனை கேள்விப்பட்டு கடற்கரையில் பலரும் திமிங்கலத்தின் வாந்தியை தேடி அலைகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raji - chennai,இந்தியா
09-செப்-201516:57:03 IST Report Abuse
raji சுவாகா என்ற வார்த்தை என் நகைசுவை உணவர்வை தூண்டுகிறது நன்றி
Rate this:
Share this comment
Cancel
Nalini - Madurai,இந்தியா
09-செப்-201511:31:22 IST Report Abuse
Nalini ம்ம் திமிங்கிலத்தின் வாந்திக்கு இதனை பேர் காவல் ஆனால் நம்முடைய ?
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
09-செப்-201509:50:11 IST Report Abuse
Maddy அட வாந்திக்கு வந்த வாழ்க்கைய பாருங்க... இப்படித்தான் வாந்தி அல்லுறவன், பிச்சை எடுக்கரவனெல்லாம் தொழிலதிபர் ஆகுறாங்க போல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X