ஆப்பிளின் புது வரவுகள் இன்று அறிமுகம் : ஆர்வத்தில் மக்கள்

Updated : செப் 09, 2015 | Added : செப் 08, 2015 | கருத்துகள் (15)
Advertisement
Apple, IPhone, ஆப்பிள், ஐபோன்

நியூயார்க்: புது வகை ஐபோன்கள், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என ஆப்பிள் நிறுவனம், இன்று எந்த பொருளை அறிமுகப்படுத்த இருக்கிறேதோ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று (செப்.9ம் தேதி) நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த எண்ணி, பில் கிரகாம் சிவிக் ஆடிட்டோரியத்தை தேர்வு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், 2 புதிய வகை ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 3டி டச் டிஸ்பிளே, போர்ஸ் டச் டிஸ்பிளே வசதியுடன் கூடிய இந்த ஐபோன்களுக்கு ஸ்டான்டர்ட் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் மாடல் என்று பெயர் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஓஎஸ் 9 அப்டேட் உடன் மல்டி விண்டோ மல்டிடாஸ்க்கிங் திறன் பெற்ற ஐபேட் ப்ரோவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சுபிரீயர் ஏ8 புராசசர், டச் பேடுடன் கூடிய ரிமோட் மற்றும் புதிய யூசர் இன்டர்பேஸ் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஆப்பிள் டிவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதேபோன்று, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என மேலும் சில புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maddy - bangalore,இந்தியா
09-செப்-201516:44:51 IST Report Abuse
Maddy யானை விலை சொல்ல்றங்கையா அதுக்கு micromax கான்வாஸ் வாங்குனா 60 ஆயிரம் ரூபா மிச்சம் ஆகும்பா... குடும்ப செலவுக்கு சேத்துவசிக்கொங்க ... வெங்காயம் மட்டும் இல்ல இனிமே அரிசி கூட சீனா - ல இருந்து பிளாஸ்டிக் அரிசியா வாங்குற நெலம கூட வரலாம்... விவசாயிங்க அழியாம பாத்துக்கனும்னா விதை விதைச்ச விவசாயி தான் முழு லாபத்தையும் அனுபவிக்கனும் இதை யாராவது மோடி ஜி கிட்ட சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க...
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
08-செப்-201522:59:32 IST Report Abuse
தாமரை என்ன விலையில் கொடுக்கப்போகிறீர்கள். அதைச் சொல்லுங்க முதலில்.
Rate this:
Share this comment
Cancel
H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா
08-செப்-201520:31:19 IST Report Abuse
H .Akbar ali   Hello
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X