பொது செய்தி

இந்தியா

மத்திய அரசிடம் தொழிலதிபர்கள் எதிர்பார்ப்பது என்ன?

Updated : செப் 08, 2015 | Added : செப் 08, 2015 | கருத்துகள் (42)
Advertisement
மத்திய அரசிடம் தொழிலதிபர்கள் எதிர்பார்ப்பது என்ன?

புதுடில்லி: டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் வட்டி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். இதனை குறைக்க வேண்டும் என தொழிலதிபர்கள் வலியுறுத்தினர்.

உலக பொருளாதார நிலைமை குறித்து ஆராய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி, இந்திய தொழில்துறையினர் "தைரியமாக இருங்கள், கடினமான முடிவுகளை எடுத்து, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என கூறியதாக, அந்த அமைப்பின் தலைவர் சுமித் மஜூம்தர் கூறினார்.

தொழில்துறை புத்துயியர் பெற வேண்டும் என பிரதமர் மோடி கூறியதாக அசோசெம் தலைவர் ரானா கபூர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 27 பேர் இந்த கூட்டத்தில் பேசினர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பிரச்னை பங்குச்சந்தைகளை தவிர மற்ற வகைகளில் இந்தியாவை பாதிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் வலிமையாக உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த ஆலோசனை கூறியதாக கூறினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனை குறைத்து கடினமான முடிவுகளை எடுக்கவும், முதலீட்டை அதிகரிக்க உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.

எப்ஐசிசிஐ தலைவர் ஜியோத்சனா சூரி கூறுகையில்,
வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாகவும், இது பற்றி பலர் இந்த கூட்டத்தில் கூறியதாகவும் கூறினார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகள் குறித்தும், அதன் மீதான தாக்கம் இந்தியாவில் குறைவாக இருப்பது குறித்தும், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்வித்ந் சுப்ரமணியம் எடுத்துக்கூறினார்.

இந்த கூட்டத்தில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறைவாக இருப்பது குறித்தும், கடந்த ஜூன் மாத காலாண்டில், பொருளாதார வளர்ச்சி குறைவாக இருப்பது குறித்தும் கவலை தெரிவித்தனர். 2015/16ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என நம்பிக்கை மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதத்தில் தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல், குமார் மங்கலம் பிர்பா, ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஐசிஐசிஐ வங்கியின் சந்தா கோச்சர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNA PAANA - Chennai,இந்தியா
09-செப்-201512:18:31 IST Report Abuse
SUNA PAANA முதலில் வங்கிகளின் வரா கடன்களை வசூல் செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பட்டியல் எல்லா பத்திரிகைகளிலும் மற்றும் செய்தி சேனல்களிலும் வெளியிட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் மல்லையா போன்ற பெரும் பண முதலைகளை கைது செய்து அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
09-செப்-201512:17:43 IST Report Abuse
mukundan இங்கு முதலாளித்துவம் பேசும் பலர் எதோ ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்பவர்கள் தான்... சிலர் இந்தியாவில் செய்கின்றனர் சிலர் வெளிநாடுகளில் செய்கின்றனர்.... முதலாளிகள் இல்லாமல் நமக்கு இங்கு வேலை இல்லை.... ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தால் என்ன நடக்கும் என்று 1930 களில் அமரிக்கர்களின் வாழ்கையை ஆராய்ந்தால் புரியும்... இங்கு விவசாயம் மட்டுமே பெரிது என்று சொல்லுபவர்கள் வெளிநாடுகளில் விவசாய வேலை என்றால் போவீர்களா??
Rate this:
Share this comment
Cancel
mohan - Hyderabad ,இந்தியா
09-செப்-201510:59:39 IST Report Abuse
mohan வங்கி வட்டி விகிதம் அந்நாட்டின் வருடாந்தர விலைவாசி குறி அளவிற்கு தகுந்தார் போல ஏறும் அல்லது குறையும். அது தான் முறை. மேல் நாடுகளில் விலைவாசி ஏற்றமும் குறைவதும் குறைவு. ஆகையால் வங்கி வட்டி குறைவு. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிடும். நாமும் வட்டியை குறைத்தால் மேலும் ஓய்வு பெற்றோர்கள் அவதி பெறுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X