சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை: டாக்டர் கனவு 'கனவானது'

Added : செப் 11, 2015
Share
Advertisement
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி சிவசக்தி,17, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தத்தைச் சேர்ந்தவர் குமரேசன் மகளான இவர், பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை காலாண்டு தேர்வு எழுதினார். மதியம் சாப்பிட சென்றவர்

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி சிவசக்தி,17, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்தர்கள் நத்தத்தைச் சேர்ந்தவர் குமரேசன் மகளான இவர், பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை காலாண்டு தேர்வு எழுதினார். மதியம் சாப்பிட சென்றவர் வகுப்புக்கு வரவில்லை.
அவரை தேடி சக மாணவியர் விடுதிக்கு சென்றனர். அங்கு காப்பாளர் ஜோதியின் அலுவலக அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு சிவசக்தி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.டி.எஸ்.பி., சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் துரைசுப்பிரமணியன் விசாரிக்கின்றனர்.மன அழுத்தம் காரணமா: மாணவி சிவசக்தி தனது பாட புத்தகங்களில், 'கு.சிவசக்தி எம்.பி.பி.எஸ்.,' என்று எழுதி, டாக்டர் கனவுடன் படித்து வந்துள்ளார். சில நாட்களாக அவர் மனஅழுத்தத்திற்கு ஆளானார். ஆசிரியர்களின் அறிவுரைபடி, சிவசக்திக்கு சிகிச்சை அளிக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்த சில நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X